அடேங்கப்பா அதுக்குள்ள இத்தனை கோடி வசூலா!.. நம்பர் ஒன் இடத்தை உறுதி செய்ய ப்ரீ புக்கிங்கில் மிரட்டும் ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்குப் பிறகு ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது. நெல்சன், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறாரா என ரிலீசுக்கு பின்பு தான் தெரியும்.

ஆனால் ரஜினி, இன்றும் தான் நம்பர் ஒன் தான் என்பதை படத்தின் ரிலீஸுக்கு முன்பே நிரூபித்துவிட்டார். ரஜினிக்கு இந்திய அளவில் எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ, அதே போல் தான் வெளிநாடுகளிலும். ஜப்பானில் ரஜினிக்கு என்று ரசிகர்கள் மன்றமே இருக்கிறது. அதேபோல் ஜப்பானில் முத்து திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு போல் இதுவரை எந்த ஒரு இந்திய படத்திற்கும் கிடைக்கவில்லை.

Also Read:போட்டிக்கு நாங்களும் வரலாமா.? சூப்பர் ஸ்டார் பட்டத்தைப் போல் ஆரம்பித்த உலக நாயகன் பஞ்சாயத்து

இப்படி வெளிநாடுகளிலும் தன்னுடைய சூப்பர் ஸ்டார் கொடியை பறக்க விட்டிருக்கிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் வெளிநாடுகளில் தொடங்கிவிட்டது அனைவரும் அறிந்த விஷயம் தான். தற்போது அமெரிக்காவில் இந்த படத்திற்கான ப்ரீ புக்கிங் வசூல் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.

ஆரம்பத்தில் இந்த அட்வான்ஸ் புக்கிங் தொடங்கிய பொழுது 33 லட்சம் ஆக இருந்த வசூல், வார இறுதி நாட்களில் நிலவரப்படி 57 லட்சம் ஆக அதிகரித்திருந்தது. தற்போது இந்த வசூல் ஒரு கோடியை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பட ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்கள் இருப்பதால் இந்தத் தொகை பல மடங்கு அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:கமலை ஆதரித்து, ரஜினியை வளரவிடாமல் செய்த பாலிவுட்.. சூழ்ச்சிக்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

மேலும் அமெரிக்காவில் ஜெயிலர் படத்திற்கான பிரிமியர் ஷோ ஆகஸ்டு ஒன்பதாம் தேதி வெளியிடப்படுகிறது. அந்த ஒரு நாளுக்கான வசூலே ஒரு மில்லியன் தொடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. ஜெயிலர் திரைப்படத்துடன் சேர்த்து மொத்தம் எட்டு படம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாகவும், தற்போதைக்கு ரஜினி படத்தின் வசூல் தான் நம்பர் ஒன் இடத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவில் யார் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள், யார் சூப்பர் ஸ்டார் என தேவையில்லாத விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் நேரத்தில், தலைவர் அமெரிக்கா வரை அசால் காட்டிக்கொண்டிருக்கிறார். ஜெயிலர் திரைப்படத்தின் வசூல் தமிழகம் மட்டும் இல்லாமல் உலகம் எங்கும் மிகப்பெரிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:ரஜினிக்கு இது ஒன்னும் புதுசு இல்ல.. சூப்பர் ஸ்டார் பரபரப்பாக பேசிய 5 மேடைகள்

Advertisement Amazon Prime Banner