செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

இளம் இயக்குனர்கள் வேண்டாம்.. 7 வருடம் கழித்து பழைய ஹிட் இயக்குனருடன் கைகோர்க்கும் ரஜினி

ஒரு காலத்தில் ஒரு வருடத்திற்கு 20 படம் நடித்து 20 படமும் சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த சில மாதங்களாக ஒரு கதையை தேர்ந்தெடுக்க தடுமாறி வருகிறார் என்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் இந்த வயதில் தனக்கு எந்த மாதிரி கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க வேண்டும் என்ற தெளிவே இல்லாமல் இருக்கிறாராம் ரஜினி.

அண்ணாத்த படத்தை ஆகா ஓகோ என ரஜினி ரசிகர்கள் கொண்டாடினாலும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் அந்த படம் திருப்தி செய்ததா என்று சொன்னால் சந்தேகம்தான். அதேபோல் கடந்த சில வருடங்களாகவே ரஜினியின் படங்கள் முன்னர் போல் இல்லை என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

அண்ணாத்த படத்திற்கு பிறகு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போன ரஜினிகாந்த் இனி சினிமாவில் நடிக்க மாட்டார் என பேச்சுக்கள் எழுந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட ஆறு இயக்குனர்களிடம் கதை கேட்டு வைத்துள்ளாராம். அடுத்த படத்தை எவ்வளவு வேகமாக முடிக்க முடியுமோ அவ்வளவு வேகமாக முடித்து விட வேண்டும் என்ற ஒரு கண்டிஷனும் இதில் உள்ளது.

மேலும் தனக்கு தெரிந்த சில இளம் இயக்குனர்களை அழைத்து கதை கேட்ட ரஜினிகாந்துக்கு எதிலும் திருப்தி ஏற்படவில்லை. இதனால் கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து தன்னுடைய ஆஸ்தான சூப்பர் ஹிட் இயக்குனரான கேஎஸ் ரவிக்குமார் உடன் இணைந்து ஒரு படம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறாராம் ரஜினி.

தனக்கு எந்த மாதிரி கதை எழுதி ரசிகர்களிடம் அதைக் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாக தெரியும் எனவும் தன்னுடைய வட்டாரங்களில் தெரிவித்து வருகிறாராம். இதனால் அனேகமாக ரஜினியின் அடுத்த படம் கே எஸ் ரவிக்குமார் உடன் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருவேளை இந்தப் படம் கைவிடப்பட்ட படமாக இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் விரைவில் இந்த படத்தை முடிக்க வேண்டும் என்பதால் கண்டிப்பாக அது ஒரு புதிய கதையாகத்தான் இருக்கும் எனவும் கே எஸ் ரவிக்குமாரின் பழைய கமர்சியல் ஹிட் பட வரிசையில் இந்த படமும் இணையும் எனவும் எதிர்பார்க்கிறார்கள்.

Trending News