சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

தமிழ் சினிமாவின் மாற்றத்தை உணர்ந்த 4 நடிகர்கள்.. குறுக்கீடு செய்யாமல் ஒதுங்கும் ரஜினி மற்றும் கமல்

தமிழ் சினிமாவில் 60 வயது கடந்த நடிகர் கூட தொடர்ந்து படங்களில் நடித்து வருகின்றனர். ஆனால் 30 வயதே இருக்கும் சில நடிகர்களுக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வராமல் இருப்பதற்கு காரணம் சீனியர் நடிகர்கள் ஒத்துக் கொள்ளும் விஷயங்கள்தான்.

ரஜினிகாந்த் அன்றைய கால கட்டத்தில் தன்னுடைய படங்களில் தனக்கென சில காட்சிகள் வைக்குமாறு கூறுவார். மேலும் ரசிகர்களுக்கு இந்த காட்சிகள் தான் பிடிக்கும், இந்த மாதிரியான வசனங்கள் தான் இடம்பெற வேண்டுமென எனக் கூறுவார்.

Also read: சிவகார்த்திகேயனுக்காக கெஞ்சிய நெல்சன்.. விடாப்பிடியாக மறுத்த ரஜினிகாந்த்

ஆனால் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர்களிடம் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிப்பதில்லை சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் கூட ரஜினிகாந்த் தலையீடு இல்லாமல் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கமல்ஹாசன் தன்னுடைய படங்களில் மாற்றங்கள் செய்யச் சொல்வார். இதனை பல பிரபலங்கள் பேட்டியில் கூறியுள்ளனர். ஆனால் சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் கமல்ஹாசன் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய சொல்லவில்லை தனக்காக கதாபாத்திரத்தை கூட மாற்றம் செய்ய வேண்டாம் எனக் கூறி லோகேஷ் சொன்னதை மட்டுமே செய்ததாக கமல்ஹாசனை கூறியிருந்தார்.

Also read: வரலாற்று கதையில் நடிக்க ஆசைப்பட்ட ரஜினிகாந்த்.. வாய்ப்பளிக்க தவறிய மணிரத்னம்

ரஜினி, கமல் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக சத்யராஜ், பிரபு போன்ற நடிகர்கள் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஆனால் ஆரம்பத்தில் இவர்களும் நடிகர்களாக இருக்கும் போது சில மாற்றங்கள் செய்ய சொல்லியுள்ளனர். இப்போது இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை மட்டும் தான் செய்கிறார்கள் அதனால் தான் 30 வயது கதாபாத்திரத்தில் கூட இவர்கள் நடித்து வருகின்றனர்.

ஆனால் 30 வயது இருக்கும் நடிகர்கள் சிலருக்கு இப்போது வரை பட வாய்ப்புகள் கிடைப்பதில்லை அதற்கு காரணம் தற்போது தன்னுடைய மார்க்கெட் என்ன என்பதை புரிந்து கொள்ளாமல் தொடர்ந்து இயக்குனர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பதால் தான் தற்போது இருக்கும் இதர நடிகர்கள் யாருக்கும் வாய்ப்பு தருவதில்லை.

Also read: நெல்சனுக்கு கடிவாளம் போட்ட சன் பிக்சர்ஸ்.. விழி பிதுங்கி நிற்கும் ரஜினிகாந்த்!

- Advertisement -spot_img

Trending News