வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சினிமாவை விட்டு போக நினைத்த ரஜினிகாந்த்.. மீண்டும் கூட்டிட்டு வந்த பிரபல நடிகர்

தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டாராக வலம் வர பலர் உதவியுள்ளனர். ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த ரஜினிகாந்தை முதல் முறையாக குணச்சித்திர வேடத்தில் எஸ்பி முத்துராமன் இயக்கிய புவனா ஒரு கேள்விக்குறி படத்தில் நடித்தார்.

இப்படம் சிவக்குமாரை விட ரஜினிக்குத்தான் அதிக பெயரை வாங்கிக் கொடுத்தது. அப்போது ரஜினிகாந்த் மற்றும் சிவகுமார் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இவர்கள் இருவரும் கவிக்குயில் மற்றும் புவனா ஒரு கேள்விக்குறி படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள்

புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் சூட்டிங் போது நடிகை சுமித்ராவிடம் ரஜினிகாந்த் பேசிக் கொண்டே இருப்பாராம். அப்போது உதவி இயக்குனர் வந்து இரண்டு பக்கங்கள் கொண்ட வசனங்களை கொடுத்து படிக்கச் சொல்லி உள்ளார். அதன் பிறகு ரஜினி அதை முழுவதும் மனப்பாடம் செய்து உள்ளார்.

அதன்பிறகு சிவகுமார் வந்து நீ படித்த சீன் படத்திலேயே இல்லை என சொன்னாராம். இப்படி நீ ஹீரோயின்கள் கூட பேசிக்கிட்டே இருந்தா உன்ன பொம்பளை பொறுக்கின்னு யாராச்சும் சொல்லிடுவாங்க, அதனால் தான் இப்படி செஞ்சேன் என்றாராம். ரஜினியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என சிவக்குமார் கவனம் இருப்பாராம்.

புவனா ஒரு கேள்விக்குறி படத்தின் சூட்டிங் முடிந்தவுடன் இவர்களில் யார் வீடு அருகில் உள்ளதோ அங்குபோய் இருவரும் சாப்பிடுவார்களாம். ரஜினி மீது மிகுந்த அக்கறை காட்டுவாராம் சிவகுமார். அப்போது ரஜினிக்கு அவ்வளவாக தமிழ் பேச தெரியாது.

இதனால் சினிமா துறையை எனக்கு வேண்டாம், எனக்கு எந்த மொழியும் சரியா வரமாட்டேங்குது, யார் பேசுறது புரிய மாட்டேங்குது எனக்கு இந்த சினிமாவே வேண்டாம் என்ன சிவகுமார் இடம் சொல்லி உள்ளார் ரஜினிகாந்த். ஆனால் ரஜினியை சமாதானப்படுத்தி இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல, சீக்கிரம் எல்லாத்தையும் கற்றுக்கொள்வாய் என சமாதானப்படுத்தியுள்ளார் சிவகுமார்.

Trending News