Actor Rajini: சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் பட்டைய கிளப்பிய படம் தான் ஜெயிலர். ஆனால் இவருக்குள் இப்படி ஒரு திறமையா என வியக்க வைக்கும் அளவிற்கு நடைபெற்ற சம்பவம் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.
தன் ஸ்டைலாலும், உன்னதமான நடிப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் ரஜினி. ஆரம்பத்தில் எண்ணற்ற தடைகளை மீறி இவர் மேற்கொண்ட சாதனை தற்பொழுது சூப்பர் ஸ்டார் பட்டத்தின் மூலம் கொண்டாடி வருகின்றார்.
அதிலும் குறிப்பாக சமீபத்தில் வெளிவந்த ஜெயிலர் படம் மாபெரும் வசூலை பெற்று வெற்றி அடைந்தது. நீண்ட காலத்திற்கு பிறகு ரஜினியின் நடிப்பை பார்த்ததாகவும் கொண்டாடிய வருகின்றனர் ரசிகர்கள். இதில் வியப்பூட்டும் சம்பவம் என்னவென்றால் 1992ல் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த மன்னன் படத்தில் ரஜினி மேற்கொண்ட புது முயற்சி தான்.
ஆம்! இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரஜினி தன் சொந்த குரலில் பாடிய பாடல் தான் அடிக்குது குளிரு. அதைத்தொடர்ந்து ரஜினி எந்த படத்திலும் பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: என்னது லியோ இன்னும் போனியே ஆகலையா.? ஒதுங்கிய ரெட் ஜெயண்ட், பீதியில் இருக்கும் லோகேஷ்
அப்பொழுது ரஜினி மேற்கொண்ட ஆசையை மீண்டும் அண்ணாத்த படத்தில் இவருக்கு கிடைத்ததாகவும், அவற்றை கொரோனா காலம் என்பதால் ஏற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இவர் கண்டிப்பாக அண்ணாத்த படத்தில் பாட வேண்டும் என்ற முயற்சியை மேற்கொண்ட எழுத்தாளர் தான் விவேகா.
இவரின் வேண்டுகோளுக்கிணங்க ரஜினி பாடலை பாடுவதாக இருந்தது. மேலும் அதற்கான ஒத்திகை நடைபெறும் போது தான் அவை தடைப்பட்டு போனதாகவும் கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இவர் ஏற்கும் படங்களில் இது போன்ற வாய்ப்பு இருக்குமா என காத்துக் கொண்டிருக்கின்றனர் இவரின் ரசிகர்கள்.
Also Read: முதல் முறையாக கோடியில் வசூல் செய்த 2 படங்கள்.. எம்ஜிஆர், சிவாஜிக்கு பாக்ஸ் ஆபிஸில் கொட்டிய பணமழை!