சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு.. லியோவுக்கு பதிலடி கொடுத்த முத்துவேல் பாண்டியன்

Jailer-Humkum: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தின் முதல் சிங்கிளான காவலா பாடல் இன்றுவரை இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பொழுதே, அந்த படத்தின் இரண்டாவது பாடலான ஹூக்கும் பாடலை பட குழு வெளியிட்டு ஒட்டுமொத்த சமூக வலைத்தளத்தையும் பற்ற வைத்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்த பாடல் ரஜினிக்காகவும், அவருடைய ரசிகர்களுக்காகவும் மட்டுமே எழுதப்பட்டது போல் அப்படி ஒரு உற்சாகத்துடன் இருக்கிறது.

ஹூக்கும் பாடலின் வரிகளை தற்போது ரஜினி ரசிகர்கள் பயங்கரமாக ட்ரெண்டாக்கி கொண்டு இருக்கின்றனர். வாரிசு திரைப்படத்திலிருந்து தளபதி விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நிறைய பிரபலங்களும், அவருடைய ரசிகர்களும் பேசி வந்தனர். இது மிகப் பெரிய சர்ச்சையையும் ஏற்படுத்தியது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆக இருக்கட்டும், தளபதி விஜய் ஆக இருக்கட்டும் இதற்கு பதில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வந்த நிலையில் தற்போது இந்த பாடல் பதிலாக அமைந்துவிட்டது.

Also Read:குட்டி சுவற எட்டிப் பார்த்தா கோடி பேரு உசுர கொடுப்பான்.. தலைவர் அலப்பறை செய்யும் ஜெயிலர் பட வீடியோ

பேர தூக்க நாலு பேரு.. பட்டத்த பறிக்க நூறு பேரு.. குட்டி செவுத்த எட்டி பார்த்தா உசிரு கொடுக்க கோடி பேரு.. நீ எண்டு கார்டு வச்சா இவன் ட்ரெண்ட மாத்தி வைப்பான்.. போன்ற வரிகள் அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று கிளம்பிய மொத்த அலப்பறைக்கும் பதில் சொல்லும் விதமாக அமைந்திருக்கிறது. இது போன்ற வரிகள் ரஜினி ரசிகர்களை பெரிய அளவில் உற்சாகப்படுத்தி இருக்கிறது.

உன் அலும்ப பார்த்தவன்.. உங்க அப்பன் விசில கேட்டவன்.. உன் மவனும், பேரனும் ஆட்டம் போட வைப்பவன்.. என்ற வரிகள் கடந்த மூன்று தலைமுறைகளாக ரஜினிகாந்த்துக்கு ரசிகர்களிடம் இருக்கும் வரவேற்பையும், இனியும் சூப்பர் ஸ்டார் அவர்தான், இதே போன்ற வரவேற்பு தொடரும் என்று சொல்வது போலவும் அமைந்திருக்கிறது.

Also Read:லியோவை தொடர்ந்து தலைவர் 171ல் இணைந்த முக்கிய பிரபலம்.. தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கும் லோகேஷ்

கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று இதே போன்ற ஒரு கேள்வி எழுந்த பொழுது, சந்திரமுகி ஆடியோ வெளியீட்டு விழா மேடையில் ரஜினிகாந்த் நான் யானை இல்லை குதிரை என்று ஒரு வசனத்தை சொல்லி இருப்பார். அதேபோன்று இன்று வரை ஓடிக் கொண்டுதான் இருக்கிறார். இப்போதும் அதே போன்ற ஒரு சூழ்நிலை வந்த பொழுது தன்னுடைய பாடல் மூலமே பதிலடி கொடுத்திருக்கிறார்.

ஜெயிலர் திரைப்படத்தின் அடுத்தடுத்த பாடல்களே படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் ஏற்படுத்தி விட்டது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் தமன்னா, மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடிக்கும் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது.

Also Read:சூழ்நிலையை பொறுத்து உதவனும்.. சந்தடி சாக்கில் விஜய்யை சீண்டிய சூர்யா

Trending News