தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் புகழ்பெற்ற இயக்குனராக வலம் வந்தவர் தான் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். கடந்த 1988ஆம் ஆண்டு பிரபு மற்றும் காரத்திக் நடிப்பில் வெளியான உரிமை கீதம் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆர்.வி.உதயகுமார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றி பெற்று தந்தது.
இதனை தொடர்ந்து சின்னக்கவுண்டர், சிங்காரவேலன், பொன்னுமணி, எஜமான், ராஜகுமாரன் போன்ற பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவில் வழங்கினார். மேலும், ரஜினி, விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களை இயக்கியதால் இவர் டாப் இயக்குனர்களில் ஒருவராகவே வலம் வந்தார். ஆனால் உதயகுமாருக்கு கோபம் பயங்கரமாக வருமாம். கோபம் வந்தால் யாராக இருந்தாலும் அடித்து விடுவாராம்.
இதை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, “பொன்னுமணி படப்பிடிப்பின் போது நடிகை செளந்தர்யாவிற்கு நடிப்பு சொல்லி கொடுத்தேன். கிட்டத்தட்ட 11 டேக் வரை சென்றும் நான் எதிர்பார்த்தது போல் நடிப்பு வரவில்லை. இதனால் கோபமடைந்த நான் செளந்தர்யாவை அடித்து விட்டேன். அவர் கீழே விழுந்து விட்டார். அவரின் கன்னமும் வீங்கி விட்டது.
இதை யாரோ ரஜினியிடம் கூறியிருப்பார்கள் போல. ஒருமுறை நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என கேட்ட ரஜினி, உங்களுக்கு ரொம்ப கோபம் வருமாமே. யாராக இருந்தாலும் அடிச்சிருவீங்கனு சொன்னாங்க. என்னலாம் அடிச்சிராதீங்க என்றார் விளையாட்டாக. நானும் அதை கேட்டு சிரித்து விட்டேன்” என கூறியுள்ளார்.
இந்நிலையில் தான் ஆர்.வி.உதயகுமார் நடிகர் ரஜினிக்காக மிகவும் அதிக பட்ஜெட்டில் ஒரு கதை எழுதி இருந்தாராம். அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மட்டும் 10 முதல் 15 ஹெலிகாப்டர்கள் வேண்டும் என கேட்டாராம். இதனால் படத்தை தயாரிக்க இருந்த ஏவிஎம் நிறுவனம் பதறிப்போய் படத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டார்களாம்.
இவர் ரஜினியை வைத்து இயக்கிய ஒரே ஒரு படம் எஜமான் மட்டுமே அந்த படமும் மாபெரும் வெற்றி பெற்றது. எஜமான் படத்திற்கு முன்னதாகவே ஜில்லா கலெக்டர் என்ற படத்தின் கதையை உருவாக்கியவர். ஆனால் படத்தின் பட்ஜெட் மிகவும் அதிகமாக இருந்ததால் அப்படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.