சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வீரம் சிவா இயக்கத்தில் வெளியாக தயாராகிறது அண்ணாத்த. ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு வெளியீட்டு பணிகளில் படக்குழு படுபிசி.
இந்நிலையில் தலைவர்169 என ரசிகர்களால் கூறப்படும் தலைவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதாவது நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான டிகியூ-25 “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி தான் தலைவரின் அடுத்த படத்தை இயக்குகிறாராம்.
இது குறித்து கூறுகையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் நன்றாக இருந்ததாகவும் தனக்காக ஒரு படம் எழுத முடியுமா என்று தலைவர் கேட்டதாகவும் எப்போது கேட்பார் என காத்திருந்த பெரியசாமியோ சட்டென சம்மதித்ததாகவும் பேச்சு.
தலைவர் 170 பற்றிய அறிவிப்புகள் வெளிவந்த நிலையில் இப்போது 169க்கும் வந்ததில் ரசிகர்கள் இப்போதே இரட்டை சந்தோசத்தில்.