தமிழ் சினிமாவில் பல ரசிகர்களை வைத்திருப்பவர்கள் ரஜினி மற்றும் தனுஷ். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவில் தற்போது வரை தொடர்ந்து படங்கள் நடித்து வருகின்றனர்.
ரஜினி சிறுத்தை சிவாவுடன் அண்ணாத்த திரைப்படத்தில் பணியாற்றி வருகிறார். அதேபோல் தனுசும் ஹாலிவுட்டில் அவெஞ்சர்ஸ் பட இயக்குனருடன் கைகோர்த்து ஒரு படத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது சினிமாவில் பிசியாக இருக்கும் இவர்கள் இருவரைப் பற்றியும் ஏதாவது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி தான் வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது தனுஷ் போயஸ்கார்டனில் புது வீடு கட்டி வருகிறார். எதற்காக வீடு கட்டியுள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. அதாவது தனுசுக்கு ஏற்கனவே ஒரு பங்களா உள்ளது. அது அவருடைய சொந்த உழைப்பால் சம்பாதித்து கட்டிய வீடு. தற்போது வரை இந்த வீட்டில் தான் தனுஷூம் அவரது குடும்பத்தினரும் வாழ்ந்து வருகின்றனர்.
சமீபத்தில் தனுஷ் சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் புதிய வீடு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். அதற்கு காரணம் ரஜினி தான். ஏனென்றால் தொடர்ந்து இருவரும் பல படங்கள் நடித்து வருவதால் நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் ரஜினியின் பேரக்குழந்தைகளான யாத்ரா மற்றும் லிங்கா அருகில் இருந்தால் அவர்களை கொஞ்சுவதற்கும் விளையாடுவதற்கும் வசதியாக இருக்கும் என தனுஷிடம் கூறியதால் தான் போயஸ் கார்டனில் தற்போது தனுஷ் புதிதாக வீடு கட்டுவதாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தால் தன்னுடைய உடல் நலம் பற்றிய கவலை தனக்கு தெரியாது எனவும் கேட்டுக் கொண்டதால் தனுஷ் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறுகின்றனர்.