புதன்கிழமை, ஜனவரி 22, 2025

அனிருத் இருந்தா 100 கோடி கேட்கும் ரஜினி.. சின்ன பையனு ஏமாத்துறாங்க!

Rajinikanth – Anirudh: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய விஷயங்கள் நிறைய பயங்கர ட்ரெண்டாகியது. ரஜினிகாந்த் எப்போதுமே ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது அந்த படம் சம்பந்தப்பட்ட அத்தனை பேரை பற்றியும் ரொம்பவே புகழ்ந்து பேசுவார். மேலும் சில நேரங்களில் அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் வகையிலும் அறிவுரைகள் சொல்லுவார்.

இந்த முறை ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனை பற்றி பேசிய நிறைய விஷயங்களை அவருக்கே உரிய நகைச்சுவையோடு வயிறு குலுங்க சிரிக்கும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் இசை வெளியீட்டு விழாவின் பொழுது ரஜினி, படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தை பார்த்ததும் இருக அணைத்து ரொம்பவும் பாசத்துடன் முத்தமிட்டார். அதோடு அவர் அனிருத்தை பற்றி பேசிய விஷயமும் வைரலாகி வருகிறது.

Also Read:வெறும் வாய்க்கு மெல்ல அரிசி அவல் கொடுத்த சூப்பர் ஸ்டார்.. ரஜினி செய்த மோசமான தவறு

சமீபத்தை பற்றி பேசுகையில் ரஜினிகாந்த், அனிருத் இசையமைக்கும் படங்களின் வெற்றியில் அவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அனிருத்தின் இடத்தில் நான் இருந்திருந்தால் 100 கோடி வரை சம்பளம் கேட்டிருப்பேன். அனிருத்தை எல்லோரும் சின்ன பையன் என்று ஏமாற்றுகிறார்கள். அனிருத் மதிப்பு அவருக்கே தெரியவில்லை என்று தான் சொல்ல வேண்டும் என சொல்லி இருக்கிறார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு இசையமைப்பாளர் அனிருத் நெருங்கிய உறவினர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். இயக்குனர் விக்னேஷ் சிவன் கூட அனிருத்தை பற்றி ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, அனிருத் சூப்பர் ஸ்டாருக்கு என்றால் இன்னும் கொஞ்சம் அக்கறையாகவே வேலை செய்கிறார். ரஜினிக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள், ஒரு வேளை பையன் இருந்திருந்தால் அனிருத்தை பார்த்து பொறாமைப்பட்டு இருப்பார் என்று சொல்லி இருந்தார்.

Also Read:பல நாடுகளில் சகித்துக் கொள்ள முடியாத ஜெயிலர் படம்.. பெரிய பஞ்சாயத்தால் வந்த பிரச்சனை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் படங்களுக்கு சில வருடங்களாகவே இசை அமைப்பாளர் அனிருத் தான் இசையமைக்கிறார். அவருடைய இசையில் எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறுகின்றன. அதிலும் இந்த படத்தில் அனிருத் இசை அமைத்த ஹுக்கும் பாடல் மிகப்பெரிய அளவில் ட்ரெண்ட் ஆகி இருக்கிறது.

ரஜினிகாந்த் ரொம்பவே சந்தோஷமாக இருந்ததற்கு மிகப்பெரிய காரணம் இந்த பாடல் அவருடைய ரசிகர்களுக்கு ஒரு பெரிய உற்சாகத்தை கொடுத்தது தான். அதனால் தான் ரஜினி அனிருத்தை பற்றி அந்த மேடையில் அவ்வளவு பூரிப்பாக பேசி இருந்தார். கடந்த சில வருடங்களாக அனிருத்தின் சம்பளம் தான் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களில் அதிக சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:ஜெயிலரை பார்த்தபின் நெல்சனுக்கு போன் போட்ட விஜய்.. என்ன சொன்னார் தெரியுமா.?

Trending News