வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பா ரஞ்சித்துக்கு போன் போட்ட சூப்பர் ஸ்டார்.. என்ன காரணம் தெரியுமா.?

இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ரைட்டர். கடந்த வாரம் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகிறது.

சமுத்திரகனி சமூக கருத்துள்ள பல திரைப்படங்களை இதுவரை இயக்கியுள்ளார் மேலும் சாட்டை உள்ளிட்ட பல திரைப்படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார்.

அந்த வரிசையில் தற்போது ரைட்டர் படமும் இணைந்துள்ளது. இப்படத்தில் அவர் காவல்துறை அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். தற்போது இந்த ரைட்டர் திரைப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சமுத்திரகனி ஆகியோருக்கு போன் செய்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ரைட்டர் திரைப்படம் மிகவும் அற்புதமாக இருக்கிறது அந்த படத்தில் நடித்த அனைவரும் தங்களுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளனர். சமுத்திரக்கனி சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த படத்தின் இயக்குனருக்கு மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது.

விறுவிறுப்பான கதைக்களம் படம் சீக்கிரம் முடிந்து விட்டதே என்ற உணர்வை கொடுக்கிறது என்று ரஜினிகாந்த் மனம் திறந்து அனைவரையும் பாராட்டியுள்ளார். சூப்பர் ஸ்டாரின் இந்த பாராட்டுக்களால் தற்போது படக்குழுவினர் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள இனியா, மகேஸ்வரி, லிசா போன்றவர்களும் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளனர். இந்த திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கொண்டு சென்ற இயக்குனர் பிராங்கிளினுக்கு திரைப் பிரபலங்கள் பலரும் தங்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

Trending News