வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

வயசில சின்னவங்க, இல்லன்னா உங்க கால்ல விழுந்துருவேன்.. 23 வருட ரகசியத்தை மேடையில் பேசிய ரஜினி

கோலிவுட்டின் மிக முக்கிய உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த், ஒரு மேடையில் கமலை பற்றி பேசும் பொழுது அவர்களுக்குள் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். எந்த ஒளிவு மறைவுமின்றி அவர் 30 வருடங்கள் முன்னாள் கமலின் காலில் விழ கூட ரெடியாக இருந்ததாக கூறியிருக்கிறார்.

கமலஹாசனும், ரஜினிகாந்தும் சமகாலத்து போட்டியாளர்கள். இருவரும் ஒரே நேரத்தில் சினிமாவில் ஜெயிக்க ஓடிக்கொண்டிருந்தவர்கள். இயக்குனர் பாலச்சந்தர் மூலம் சினிமாவில் தங்களுக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டவர்கள். ரஜினிகாந்த் நடிக்க வந்த புதிதில் வில்லனாக நடித்தது அனைவரும் அறிந்ததே.

Also read: இருவரின் வளர்ச்சியை பார்த்து மிரண்ட ரஜினிகாந்த்.. சூப்பர் ஸ்டாரை காப்பாற்றிய ராஜ்கிரண்

அபூர்வ ராகங்கள் படத்தில் தொடங்கிய இவர்களது பயணம், 16 வயதினிலே, அலாவுதீனும் அற்புத விளக்கும், அவர்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படிதான், இளமை ஊஞ்சலாடுகிறது, நினைத்தாலே இனிக்கும், நட்சத்திரம், ஆடு புலி, உறவுகள் மலரும் என பல படங்களில் ஒன்றாக நடித்தனர். அதன் பின்னர் இவர்கள் பிரிந்து நடிக்க முடிவெடுத்து தங்களுக்கான தனிப்பாதையை தேர்ந்தெடுத்து இன்று ரஜினி சூப்பர் ஸ்டாராகவும், கமல் உலக நாயகனாகவும் இருக்கிறார்.

கமல் சினிமாவில் பல முயற்சிகளை செய்து பார்ப்பவர், உடலை வருத்தி உருவத்தை மாற்றி நடிக்க கூடியவர். ஆனால் ரஜினிக்கு அதெல்லாம் தேவையே இல்லை. அவரது ஸ்டைலை வைத்தே மக்களை தன் வசம் கொண்டு வந்தவர். ஆனால் இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காம்ப்ளிமென்ட் செய்ய தவறியதே இல்லை.

Also read: நானாக இருந்தால் தூக்கில் தொங்கி இருப்பேன்.. படையப்பா பட நடிகரை பார்த்து சொன்ன ரஜினிகாந்த்

இயக்குனர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில் பஞ்சு அருணாச்சலம் கதை எழுதி, கமலஹாசனும் , கிரேசி மோகனும் இணைந்து திரைக்கதை எழுதி, கமல் தயாரித்து நடித்த திரைப்படம் அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தில் கமல் உயரம் குறைந்த அப்பு என்னும் கேரக்டரில் வருவார். இதற்காக அவர் தன்னுடைய கால்களை மடித்து கட்டி கொண்டு குள்ள அப்புவாக வருவார், இது கமலஹாசனின் திரை வாழ்வையே மாற்றிய படம்.

இந்த படத்தை பார்த்த ரஜினி மிரண்டு போயிருக்கிறார், உடனே நேரில் சென்று கமலை வாழ்த்திய ரஜினி நீங்கள் என்னை விட வயதில் சிறியவர் இல்லை என்றால் உங்கள் காலில் விழுந்து இருப்பேன் என்று கூறினாராம். ஒரு சூப்பர் ஸ்டாராக இருந்தும் மேடையில் இப்படி ஒரு விஷயத்தை ரஜினி சொன்னது அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. என்னதான் இவர்களுக்குள் போட்டிகள் இவர்கள் இருவரும் 40 வருடங்களுக்கும் மேலாக நாகரிகமான நட்பினை பாராட்டி வருகின்றனர்.

Also read: மதுரையில் தவித்து நின்ற ரஜினிகாந்த்.. உதவி செய்து காப்பாற்றிய காமெடி நடிகை

Trending News