ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜய், உதயநிதியை அன்புத் தம்பி என குறிப்பிட்ட ரஜினிகாந்த்.. என்ன நடந்தது?

சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறிய விஜய், உதயநிதி இருவரையும் அன்பு தம்பி எனக் குறிப்பிட்டுள்ளது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஜினிகாந்த் டிசம்பர் 12 ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடினார். ஒவ்வொரு பிறந்த நாளின்போதும் அவரை ஆளுங்கட்சியினர், எதிர்க்கட்சியினர், அரசியல் பிரபலங்கள், அமைச்சர்கள், சக நடிகர்கள், கலைஞர்கள், ரசிகர்கள், விளையாட்டு பிரபலங்கள், மீடியாத்துறையினர் என பலரும் பாராட்டுகள் கூறுவர்.

இந்த முறை ரஜினி பிறந்த நாளில், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் தன் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில், ”பேரன்பிற்கும் மரியாதைக்கும் உரிய சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்தார்.

அதேபோல் துணைமுதல்வர் உதயநிதியும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு வாழ்த்துக் கூறி எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பிறந்த நாள் வாழ்த்துகள் கூறியவர்களுக்கு நன்றி கூறிய ரஜினி!

இதையடுத்து, சூப்பர் ஸ்டார் தனக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறியவர்களுக்கு நன்றி கூறும் வகையில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டவர், ”அன்புத்தம்பி துணை முதல்வர் உதயநிதி, அன்புத்தம்பி விஜய்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. விஜய்க்கும், ரஜினிக்கும் சினிமாவில் போட்டி என சினிமா விமர்சகர்களும் தயாரிப்பாளர்களும் கொளுத்தி விட்டனர். அது பல விவாதங்களை எழுப்பியது.

ஆனால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மரியாதையும் அன்பும் வைத்துள்ளனர். ரசிகர்கள் தான் தங்களுக்குள் அடித்துக் கொண்டு, சமூக வலைதளத்தில் சண்டை வளர்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் இருவருக்குள் அப்படி எல்லாம் எதுவும் கிடையாதோ? என்பது போல் விஜயின் வாழ்த்தும், அதற்கு ரஜினியின் நன்றியும் அமைந்துள்ளது என்று பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

Trending News