வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஹீரோயின் காலை பிடிக்க மறுத்த ரஜினிகாந்த்.. பல வருடத்திற்கு பிறகு உலறிய பிரபலம்

ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரங்களை ஏற்று நடித்த ரஜினிகாந்த் அதன்பிறகு ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவையே ஆட்சி செய்து வருகிறார். தற்போது 70 வயதை கடந்தும் ஹீரோவாக நடித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவருடைய ரசிகர்கள் தான்.

இந்நிலையில் சென்ற ஆண்டு ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. இதைத் தொடர்ந்து தற்போது நெல்சன் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் ரஜினி நடிக்கயுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

தற்போது ரஜினி ஒரு ஹீரோயின் காலை பிடிக்க மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து தான் நடிக்கக் கூடியவர். மேலும் நடிக்கும்போதே இப்படத்தின் விமர்சனத்தை ஓரளவு கணிக்க கூடியவர்.

கடந்த 1989 ஆம் ஆண்டு அமீர்ஜான் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரகுவரன், ஷோபனா, சவுகார்ஜானகி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சிவா. இப்படம் ஓரளவு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் சிவா படத்தில் ஒரு காட்சியில் சோபனாவின் கால்களை ரஜினி பிடிக்க வேண்டும்.

ஆனால் ஒரு பெண்ணின் கால்களை தன்னால் பிடிக்க முடியாது என ரஜினி மறுத்துள்ளார். இப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஷோபனா தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். அப்போது அவர் நடிப்பில் வெளியான படங்களின் ஞாபகங்களை பகிர்ந்துகொண்டார். அதில் சிவா படத்தை பற்றி கூறும்போது இப்படத்தில் ரஜினி தன் கால்களை பிடிக்க வேண்டிய காட்சி இருந்தது.

ஆனால் ரஜினி தன்னுடைய கால்களை பிடிக்க தங்கியதாகவும் இதனால் ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் வரும் என மறுத்ததாக ஷோபனா கூறியுள்ளார். இந்நிலையில் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு இந்த செய்தி வெளியாகியுள்ளது.

Trending News