Rajinikanth: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் பாபி சிம்ஹா நடித்த ஜிகர்தண்டா படம் ரிலீஸ் ஆகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்னும் பெயரில் வெளியான படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ் ஜே சூர்யா நடித்திருந்தார்கள். இந்த படம் தீபாவளி ரிலீஸ் ஆக வெளியானது.
கார்த்தியின் 25வது படமான ஜப்பானுடன் இந்த படத்தை தைரியமாக பட குழு ரிலீஸ் செய்தது. ஆனால் ஜிகர்தண்டா படத்துடன் ஒப்பிடும்போது ஜப்பான் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாததால் படுதோல்வியை அடைந்தது. முதல் பாகத்தில் கிடைத்த வெற்றியை இரண்டாம் பாகத்தில் கெடுத்து விடாமல் கார்த்திக் சுப்புராஜ் தக்க வைத்திருக்கிறார்.
ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிகர்தண்டா xx படம் குறிஞ்சி மலரை போன்றது என்றும், கார்த்திக் சுப்புராஜின் சிறந்த படைப்பு என்றும் இயக்குநரை பாராட்டி தள்ளியிருக்கிறார்.
Also Read:பத்து வருஷத்திற்கு படங்களை புக் செய்த ரஜினி.. 83 வயசு வரைக்கும் பிசி தான்
லாரன்ஸ் தன்னுடைய சிறந்த நடிப்பால் நம்மை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார் என்றும், அவரால் இப்படி எல்லாம் கூட நடிக்க முடியுமா என வியந்து பார்த்ததாகவும் ரஜினி சொல்லியிருக்கிறார். வித்தியாசமான கதை களத்திற்கு , வித்தியாசமான இசையை கொடுப்பதில் சந்தோஷ் நாராயணன் வல்லவர் என்றும் பாராட்டியிருக்கிறார்.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை பார்த்து நம்மை கை தட்டவும் வைத்திருக்கிறார், வைத்திருக்கிறார் சிந்திக்க வைத்திருக்கிறார் அழ வைத்திருக்கிறார் என்று ரஜினி அந்த அறிக்கையில் சொல்லி இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜை நினைத்து தான் பெருமைப்படுவதாகவும் ரஜினிகாந்த் பாராட்டி இருக்கிறார்.
நடிகர் மற்றும் இயக்குனர் எஸ் ஜெ சூர்யா, தன்னுடைய வித்தியாசமான வில்லத்தனத்தை காமெடியாக காட்டி சிரிக்க வைத்திருக்கிறார் என்றும் ரஜினி பாராட்டியிருக்கிறார். ரஜினிகாந்த் சமீப காலமாகவே நல்ல படங்களை பாராட்டுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதிலும் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ராகவா லாரன்ஸ் இருவரும் அவருடைய தீவிர ரசிகர்கள் என்பதால் தன்னால் முடிந்தவரை பாராட்டி தள்ளிவிட்டார்.
Also Read:ஜெயிலர் அலை ஓய்ந்தும் மாறனுக்கு வாரி கொடுத்த ரஜினி.. தலைகீழாக நின்னாலும் தொடக்கூட முடியாத டிஆர்பி