நாளை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 74-ஆவது பிறந்தநாள். இந்த நிலையில், Exclusive ஆக கூலி படத்தின் Glimpse காட்சிகளை வெளியிட முடிவு செய்துள்ளார் லோகி.
அதே நேரத்தில் ஜெயிலர் 2 படத்துக்கான ப்ரோமோ ஷூட் முடிந்து, நாளை ப்ரோமோ-வும் வெளியாகவுள்ளது. இது தவிர சூப்பர்ஸ்டார் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கான Tribute விடீயோக்களும் வெளியாகும்.
இப்படி surprise மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்த்த நேரத்தில் அதிர்ச்சிகரமான ஒரு விஷயத்தையும் சூப்பர்ஸ்டார் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூப்பர்ஸ்டார் சொன்ன விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலர், நிச்சயம் சூப்பர்ஸ்டார்-க்கு ஒரு பிரேக் தேவை என்றும் கூறி வருகின்றனர்.
அவ்வளவு தான் இனி எந்த படமும் இல்லை
பத்திரிக்கையாளர் சந்திப்பில், கூலி படத்தை தொடர்ந்து அடுத்து எந்த படத்தில் நடிக்க உள்ளீர்கள் என்று பத்திரிக்கையாளர் கேட்டபோது, அடுத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
இது தான் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அப்போ Retired ஆக போகிறாரா என்ற கேள்வியும் வந்துள்ளது. ஜெயிலர் 2 படத்தின் வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வரும் நேரத்தில் இவர் இப்படி கூறி இருக்கிறாரே என்ற குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் சூப்பர்ஸ்டார் சொன்னதை வைத்து பார்க்கும்போது, அவர் சின்ன பிரேக் எடுத்துவிட்டு அடுத்த படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதே தவிர, அவர் retired ஆக வாய்ப்பே இல்லை என்று தான் சினிமா பத்திரிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
அதே நேரத்தில், ஜெயிலர் 2 படத்தை முடித்த பிறகு, ஒரு வருடம் தனது உடல்நிலையில் கவனம் செலுத்திவிட்டு அவர் அடுத்த படத்தில் நடிப்பார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் ரஜினிகாந்தை பொறுத்தவரையில், அவருக்கு தன்னுடைய ஸ்பெஷல் ஆன படங்களை தானே Announce செய்யவேண்டும் என்று ஆசைப்படுபவர்.
ஒருவேளை தானே ஜெயிலர் 2 announcement-டை கொடுக்க வேண்டும் என்று நினைத்துக்கூட அவர் இப்படி சொல்லி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.