திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஜெட் வேகத்தில் எகிறிய ரஜினியின் சம்பளம்.. விஜய்க்கு பதிலடி கொடுக்க தலைவர் 171 படத்திற்கு வாரி இறைக்கும் சன் பிக்சர்ஸ்

Rajini Salary: ஜெயிலர் வெற்றியால் ரஜினியின் மார்க்கெட் இப்போது அதிரடியாக உயர்ந்திருக்கிறது. மற்ற நடிகர்கள் செய்யாததை ரஜினி தயாரிப்பாளர் நலன் கருதி செய்யக்கூடியவர். அதாவது தன்னுடைய முந்தைய படம் தோல்வி பெற்றால் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைத்துக் கொள்வார். அதேபோல் வெற்றி பெற்றால் தான் அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகரித்து கேட்பார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக தோல்வியுற்றது. ஆனாலும் மீண்டும் சன் பிக்சர்ஸ் உடன் ரஜினி கூட்டணி போட்ட படம் தான் ஜெயிலர். இதற்கு முன்னதாக நெல்சன் இதே நிறுவனத்தில் பீஸ்ட் படம் எடுத்த நிலையில் அதுவும் மோசமான விமர்சனத்தை பெற்றது.

Also Read : 25 நாட்கள் தாண்டியும் வசூலை வாரி குவிக்கும் ஜெயிலர்.. ஓடிடி ரிலீஸ் நெருங்கினாலும் குறையாத கலெக்ஷன்

இவ்வாறு நெல்சன், ரஜினி, சன் பிக்சர்ஸ் மூவருக்குமே கடைசி படம் தோல்வியுற்ற நிலையில் ஜெயிலர் படத்தை பெரிதும் நம்பி இருந்தனர். ஆனால் எதிர்பார்த்ததற்கு மேலாக ஜெயிலர் படம் வசூலை வாரி குவித்து வருகிறது. கிட்டத்தட்ட 25 நாட்களைக் கடந்த நிலையில் இப்படம் கிட்டத்தட்ட 630 கோடிக்கு அதிகமாக வசூலை ஈட்டி உள்ளது.

மேலும் ஜெயிலர் படத்திற்கு ரஜினிக்கு 120 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினிக்கு 100 கோடிக்கான காசோலை மற்றும் ஒன்றரை கோடி மதிப்பிலான BMW X7 கார் ஆகியவற்றை பரிசாக சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் கொடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து அடுத்ததாக லைக்கா தயாரிப்பில் ரஜினி நடிக்க இருக்கிறார்.

Also Read : ஜெயிலர் வேகத்தை குறைத்த குஷி.. முதல் நாள் கலெக்ஷன் ரிப்போர்ட்

இதைத்தொடர்ந்து லோகேஷ், ரஜினி கூட்டணி ஏற்கனவே முடிவான ஒன்றுதான். இப்போது இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க முன் வந்திருக்கிறது. அதன்படி ஜெயிலர் வெற்றியால் தலைவர் 171 படத்திற்கு ரஜினி 250 கோடி சம்பளம் கேட்டு இருக்கிறாராம். வேறு வழியில்லாமல் பூம்பூம் மாடு போல சன் பிக்சர்ஸ் இதற்கு தலையாட்டி உள்ளதாம். ஏனென்றால் ஜெயிலர் வெற்றி பெறுமா என்ற சந்தேகம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இருந்தது.

ஆனால் லோகேஷை பொருத்தவரையில் ஹிட் படங்கள் மட்டுமே கொடுத்த வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் லியோ படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இதையெல்லாம் கணித்து தான் தலைவர் 171 நல்ல வசூல் பெரும் என்ற நம்பிக்கையில் ரஜினி கேட்ட சம்பளத்தை கொடுக்க சன் பிக்சர்ஸ் முன் வந்துள்ளது. இதன் மூலம் விஜய்யின் சம்பளத்தை விட இப்போது ரஜினியின் சம்பளம் தான் அதிகம். மேலும் விஜய்க்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக சன் பிக்சர்ஸ் ரஜினிக்கு சம்பளத்தை வாரி இறைத்திருக்கிறது.

Also Read : ஜெயிலர் வெற்றிக்கு காரணமான 2 நடிகர்கள்.. பேராசையில் தலைவர் 170-க்கு கண்டிஷன் போட்ட சூப்பர் ஸ்டார்

Trending News