செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஐஸ்வர்யா வளர்ச்சிக்காக கடுமையா போராடும் ரஜினி.. உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 70 வயது ஆகியும் படு சுறுசுறுப்பாக அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. தன்னுடைய மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரிலும் இப்பொழுது நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அடுத்தடுத்து தலைவர் 170, தலைவர் 171 படங்களின் பேச்சு வார்த்தைகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். மேலும் இந்த படம் விளையாட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் கதையாகும்.

Also Read:பாலச்சந்தரின் மறக்க முடியாத 5 படங்கள்.. ரஜினியை புது பரிமாணத்தில் காட்டிய படம்

ரஜினிகாந்த் எப்பொழுதும் படப்பிடிப்பு தளங்களில் ரொம்பவும் எளிமையாக இருப்பவர். மேலும் சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அதே போன்று தான் லால் சலாம் படப்பிடிப்பிற்கும் சரியாக காலை 7 மணிக்கு எல்லாம் ஆஜராகி விடுகிறாராம். அதே போன்று நடுராத்திரி 3 மணி வரை கூட படப்பிடிப்பு தளத்தில் இருக்கிறாராம். மகளின் படத்திற்காக ஆர்வம் காட்டும் ரஜினியின் மீது தற்போது மிகப்பெரிய நெகட்டிவ் விமர்சனம் ஒன்று எழுந்து இருக்கிறது.

ரஜினிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதிலிருந்தே அவருடைய மகள்களில் யாராவது ஒருவர் எப்போதுமே அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பார்கள். அதே போல் ரஜினி இந்த நேரத்தில்தான் வருவார், இந்த நேரத்திற்குள் படப்பிடிப்பை முடித்து அவரை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இயக்குனர்களிடம் ஏகப்பட்ட கண்டிஷன்கள் போடுவார்கள். இந்த பிரச்சனை அண்ணாத்தே திரைப்படத்தின் போது பூதாகரமாக வெளியானது.

Also Read:80களில் நெகட்டிவ் ரோலில் ரஜினி பின்னிய 5 படங்கள்.. கமலை மட்டுமே தூக்கி வைத்த பாலச்சந்தர்

ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போதும் ரஜினி சரியாக காலை 7 மணிக்கு படப்பிடிப்புக்கு வந்து விடுவார். அவரை மாலை 6 மணிக்கு எல்லாம் ஷூட்டிங் முடித்த அனுப்பி விட வேண்டும். ரொம்பவும் அதிகமாக வேலை வாங்க கூடாது போன்ற அதிக கண்டிஷன்களுடன் தான் அந்த படத்திற்கு ஓகே சொன்னார்கள். நெல்சன் என்ன செய்வது என்று தெரியாமல் எல்லா நிபந்தனைகளுக்கும் கட்டுப்பட்டு தற்போது படத்தையும் ஒரு வழியாக முடித்து விட்டார்.

மற்ற இயக்குனர்களுக்கு மட்டும் இப்படி நிபந்தனைக்கு மேல் நிபந்தனை போட்டுவிட்டு, ஐஸ்வர்யாவின் படம் என்று வரும் பொழுது நள்ளிரவு மூன்று மணி வரை எல்லாம் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்டில் இருப்பது, மகளின் வளர்ச்சிக்காக ரொம்பவும் அவர் கஷ்டப்படுகிறார் என்பது போல் தெரிகிறது. அதே நேரத்தில் மற்ற இயக்குனர்களை பற்றி யோசிக்காமல் அவர்களுடைய படங்களில் எல்லாம் இப்படி வேலை செய்யவில்லை என்று விமர்சனங்களும் இருந்து கொண்டிருக்கிறது.

Also Read:ரஜினியை மிரள வைத்த காமெடி நடிகர்.. இவரைப் போய் மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படும் சூப்பர் ஸ்டார்

Trending News