நயன்தாரா தன்னுடைய இருபதாவது வயதில் சினிமாவில் காலடி பதித்தார். தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமானவர் அதன் பின் சந்திரமுகி, கஜினி என தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி படங்களை கொடுத்து அசத்தினார். அன்றிலிருந்து அவர் மார்க்கெட் உயரத் தொடங்கியது. தமிழுக்கு முன்பே மலையாளத்தில் மூன்று படங்கள் நடித்துள்ளார்.
தமிழில் இவர் கடைசியாக நடித்த படம் அன்னபூரணி. ஒரு வருட காலமாக இவர் குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக படங்களில் கமிட்டாகாமல் இருந்து வந்தார். இப்பொழுது மீண்டும் சினிமா பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார். டெஸ்ட், ராக்காயி, தனி ஒருவன் 2, மூக்குத்தி அம்மன் 2 என அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகியுள்ளார்.
இப்பொழுது நெட்பிலிக்ஸ் வலைதளத்தில் அவருடைய கல்யாண ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. அதை அவருடைய பயோகிராபி போல் சித்தரித்து, சினிமாவில் அவர் வளர்ந்த விதம் பட்ட கஷ்டங்கள் எல்லாத்தையும் சேர்த்து ஆவணப்படமாக இயக்கியுள்ளனர். இதை கௌதம் வாசுதேவமேனன் ரெடி பண்ணியுள்ளார்.
ஆனால் அதில் பல விஷயங்கள் மறைக்கப்பட்டுள்ளது. இப்படித்தான் ஒருமுறை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய சுயசரிதையை படமாக வெளியிடலாம் என்று எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனை அழைத்துள்ளார். அவரும் சந்தோஷத்துடன் ரஜினியை அடிக்கடி பார்த்து வந்தார்.
ஒரு கட்டத்திற்கு மேல் ரஜினி பயோகிராபி படம் என்பது உண்மையான வரலாறாக வேண்டும். சில விஷயங்களை சொல்ல முடியும் சிலவற்றை மறைக்கத்தான் முடியும் அதனால் இது உண்மையானதாக இருக்காது என அந்த முடிவிலிருந்து பின் வாங்கி விட்டார் ரஜினிகாந்த். மக்களுக்கு பொய்யானதை சொல்லக்கூடாது என சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் நிலைத்து நின்று விட்டார்.
இப்பொழுது நயன்தாரா வெளியிட்ட ஆவணப்படத்தில் பாதிக்கு பாதி உண்மை இல்லை. அவர் இந்த தொகுப்பில் அவருடைய முன்னாள் காதலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. பிரபுதேவா, தனுஷ், சிம்பு என சினிமா துறையில் அவர்களிடம் இருந்த நெருக்கத்தை பற்றிய காட்சிகள் எதுவும் பெறவில்லை.