புதன்கிழமை, ஜனவரி 15, 2025

‘அன்பு தம்பி விஜய்’.. சண்டை முடிஞ்சி அம்புட்டு தான், விஜய்க்கு எண்டு கார்டு, SK-க்கு என்ட்ரி கார்டு!

Rajinikanth: ‘ ஊரு ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்’. இந்த சாராம்சத்தை வைத்துதான் சினிமா வியாபாரம் நடந்து கொண்டிருக்கிறது.

வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும் வரைக்கும் தான் நடிப்பு திறமையை வெளிப்படுத்த வேண்டும். வளர்ந்த ஹீரோவாகிவிட்டால் தனக்கு எதிரி யார் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அவரை விட தன்னுடைய படம் வெற்றி பெற வேண்டும் என்று தன்னுடைய ரசிகர்களை ஓட வைக்க வேண்டும்.

இதை ஹீரோக்கள் செய்கிறார்களோ என்னவோ படத்தின் மீது முதலீடு போட்டவர்கள் கச்சிதமாக செய்கிறார்கள்.

ரஜினிக்கும் விஜய்க்கும் போட்டி என ஆரம்பித்த விஷயமே ரொம்ப அபத்தமாக இருந்தது.

விஜய்க்கு எண்டு கார்டு, SK-க்கு என்ட்ரி கார்டு!

இதற்கிடையில் விஜயின் ஆதரவாளர்கள் ரஜினியை பேச, ரஜினியின் ஆதரவாளர்கள் விஜய் பற்றி பேச என இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போனது.

கடைசியில், ஆடு பகை குட்டி உறவு என்று சொல்வார்கள். இங்கு குட்டி பகை, ஆடு உறவு என்ற கதை ஆகிவிட்டது.

நேற்று டிசம்பர் 12 நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய 74 ஆவது பிறந்த நாளை கொண்டாடி இருந்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.

நடிகர் மற்றும் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் ரஜினிக்கு வாழ்த்து சொல்லி இருந்தார். இன்று தனக்கு வாழ்த்து சொல்லிய அத்தனை பேருக்கும் பிரச்சினை நன்றி சொல்லி இருக்கிறார்.

நடிகர் விஜயை அன்பு தம்பி விஜய் என குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வளவுதான் இவர்களுக்குள் பிரச்சனை என்று சொன்னதெல்லாம் அப்படியே காற்றில் பறந்து விட்டது.

இப்போது ட்விட்டரில் அன்புத் தம்பி விஜய் என்ற ஹாஸ்டாக்கை வைரல் ஆக்கி வருகிறார்கள். இதிலும் ஒரு பெரிய சூட்சமம் இருக்கிறது.

ஒரு வேளை விஜய் சினிமாவில் இருந்து விலகாமல் இருந்தால் இந்த போட்டி இருப்பது போல் மாயபிம்பம் தொடர்ந்து காட்டப்பட்டிருக்கும்.

ஆனால் தற்போது அவர் சினிமாவில் இருந்து விலக போவதாக அறிவித்துவிட்டார். இனி இந்த போட்டி என்ற ஒரு கட்டுக் கதை கட்ட வேலையில்லை.

அடுத்து என்ன, துப்பாக்கியை வாங்கி அடுத்த தளபதி என பெயர் வாங்கியிருக்கும் சிவகார்த்திகேயனை இந்த போட்டியில் என்ட்ரி போடுவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

Trending News