சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே மக்களுக்கு நல்ல பொழுதுபோக்கு திரைப்படங்களை தருபவர். அதேபோல் சூர்யா, காதல் படங்கள் மற்றும் போலீஸ் திரில்லர் படங்களில் சூர்யாவின் நடிப்பு பிரமாதமாக இருக்கும். மறுபுறம் விஜய் ஒரு நெகிழ்வான நடிகர், அவர் கிட்டத்தட்ட அனைத்து விதமான கதாபாத்திரத்தையும் செய்யக்கூடியவர். அதேபோல் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் தனக்கு ஏற்ற கதாபாத்திரத்தை தாண்டியும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். சூப்பர் ஸ்டார் முதல் சிம்பு வரை துணிச்சலாக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து வெற்றி பெற்ற திரைப்படங்களைப் பார்க்கலாம்.
சிலம்பரசன்: நடிகர் சிம்புவின் படங்கள் பெரும்பாலும் காதல் படங்கள், திரில்லர் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். ஆனால் இவற்றிலிருந்து மாறுபட்டு டைம் லூப் கதையை தேர்ந்தெடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்திருந்தார். புதிய வகை பார்வையாளர்களின் அன்பைப் பெற்றதால் சிம்புவின் மாநாடு படம் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்தது. சிம்பு எடுத்த துணிச்சலான முடிவு பல வருடங்களுக்குப் பிறகு சிம்பு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார்.
அஜித்: நடிகர் அஜித் 2007 இல் வெளியான பில்லா படத்தின் வெற்றிக்குப் பிறகு கேங்ஸ்டர் கதையை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அதன்பின்பு 2011இல் வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் அஜித் நடித்தார். மங்காத்தா படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது வரை அஜித்தின் ரசிகர்களுக்கு விருப்பமான படம் என்றால் அது மங்காத்தா தான். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
விஜய்: ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2012இல் முதல்முறையாக ராணுவ அதிகாரியாக துப்பாக்கி படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. விஜய்யின் கேரியரில் துப்பாக்கி படம் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படத்தில் விஜய்யின் தோற்றம் மிகவும் ஸ்டைலாக இருக்கும். துப்பாக்கி படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து பிளாக்பஸ்டர் ஹிட்டானது.
சூர்யா: சூர்யா எப்போதுமே மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவார். சூர்யா ஒரு புதிய முயற்சியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2011ல் வெளியான ஏழாம் அறிவு படத்தில் போதிதர்மர் ஆக நடித்து இருந்தார். இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில், இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் காணப்பட்டார். ஏழாம் அறிவு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
ரஜினிகாந்த்: ரஜினி பல மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்து பல பிளாக்பஸ்டர் படங்களை தந்துள்ளார். ஷங்கர் இயக்கிய அறிவியல் சார்ந்த எந்திரன் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து இருந்தார். ரஜினி எந்திரன் படத்தில் அறிவியல் விஞ்ஞானியாகவும், மனித உருவம் கொண்ட ரோபோவாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட எந்திரன் படம் அதிக வசூல் சாதனை படைத்தது.