எல்லா நடிகர்களுக்கும் இந்த படத்தை நாம் மிஸ் பண்ணி விட்டோமே என்று அவர்களுக்கு பிடித்த படங்களை பற்றி ஒரு எண்ணம் உருவாகும். சில நடிகர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை மிஸ் பண்ணி விட்டு இப்பொழுது வருகின்றனர்.
அப்படி 2005 ஆம் ஆண்டு ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த கஜினி என்ற படத்தில் சூர்யாவுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது அஜித். அதை மிஸ் பண்ணி விட்டார். பின் சூர்யா நடித்த சூப்பர் ஹிட் ஆனது. அந்த வகையில் ஒவ்வொரு ஹீரோவுக்கும் இதுபோன்ற அடி விழுந்திருக்கும்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படத்தின் ரீமேக்கில் நடிப்பதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களாக துடிதுடித்துக் கொண்டிருக்கிறார். அதில் தனுசும் இணைந்து நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
அதாவது வியட்நாம் வீடு, சுந்தரம் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1973 ஆம் ஆண்டு வெளியான கௌரவம் திரைப்படம், ரசிகர்களின் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கேரக்டரில் சிவாஜி பிரமாதமாக நடித்து கலக்கியிருப்பார்.
அதிலும் ஒரே படத்தில் எத்தனை வேடங்கள் போட்டாலும் தன் முகபாவனை உடல் மொழி மற்றும் வசன உச்சரிப்பால் மலையளவு வித்தியாசம் காட்டி ரசிகர்களை பாராட்டை அள்ளி இருப்பார். இந்த படத்தை ரீமேக் செய்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க ஆர்வம் காட்டியிருக்கிறார்.
இந்தப் படத்தில் பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கதாபாத்திரத்தை எதிர்த்து அவரது வளர்ப்பு மகனான வழக்கறிஞர் கண்ணன் என்ற இன்னொரு சிவாஜி கதாபாத்திரமும் இருக்கும். இந்த இளம் வயது சிவாஜியாக தனுஷ் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
Also Read: 3 மணி 45 நிமிடம் ஓடிய முதல் தமிழ் படம்.. சிவாஜியை பின்னுக்குத் தள்ளி சாதித்த எம்ஜிஆர்