ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

உன்ன நம்புனதுக்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட.. மஞ்சுமல் பாய்ஸால் மகள் மீது கடுப்பில் ரஜினி

Actor Rajini: சிதம்பரம் இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த மஞ்சுமல் பாய்ஸ் கேரளாவை தாண்டி தமிழ்நாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை கமல், தனுஷ், விக்ரம் என பலரும் பாராட்டி தள்ளியுள்ளனர்.

அதேபோல் வசூலிலும் இப்படம் பல சாதனைகளை பெற்று வருகிறது. இதனால் சூப்பர் ஸ்டார் தான் கொஞ்சம் வருத்தத்தில் இருக்கிறாராம். அதாவது மஞ்சுமல் பாய்ஸ் தமிழ்நாட்டில் லால் சலாம் வசூலை தாண்டிவிட்டது. கடந்த மாதம் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

தன் அப்பாவை கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்து வசூல் வேட்டை நடத்திவிடலாம் என அவர் மனக்கணக்கு போட்டிருந்தார். ஆனால் சூப்பர் ஸ்டாரை பயன்படுத்திக் கொள்ள தெரியாமல் வாய்ப்பை வேஸ்ட் செய்த ஐஸ்வர்யா தற்போது தன் அப்பாவின் இமேஜ்ஜால் படம் பிளாப் என குறை கூறிக் கொண்டிருக்கிறார்.

Also read: லால் சலாம் தோல்விக்கு அப்பா தான் காரணம்.. பகடைக்காயாய் உருட்டிய ஐஸ்வர்யா

இந்நிலையில் மஞ்சுமல் பாய்ஸின் வசூலை வைத்து லால் சலாமை பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர். அதிலும் சூப்பர் ஸ்டாரை எப்போது வம்புக்கு இழுக்கலாம் என காத்திருக்கும் ப்ளூ சட்டையும் இதை பயங்கரமாக கலாய்த்து உள்ளார்.

இதனால் அப்செட் ஆன ரஜினி உன்ன நம்பி கெஸ்ட் ரோலில் நடித்ததற்கு என்ன பண்ண முடியுமோ பண்ணிட்ட என மகள் மீது அதிருப்தியில் இருக்கிறாராம். தற்போது அவருடைய இளைய மகள் சௌந்தர்யாவும் ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறார்.

அதில் நடிக்க அப்பாவின் கால்ஷூட் வேண்டும் என்று அக்காவை போல் அடம்பிடித்து சூப்பர் ஸ்டாரை சம்மதிக்க வைத்துள்ளார். இவராவது கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வாரா அல்லது கோச்சடையான் படத்தில் கோட்டை விட்டது போல் சொதப்புவாரா என்ற பயத்தில் ரஜினி ரசிகர்கள் உள்ளனர்.

Also read: அம்பானி வீட்டு திருமண விழாவில் பேஸ்புக் ஓனர் மார்க்.. வாயடைக்க வைத்த சம்பவம்

- Advertisement -spot_img

Trending News