பெரிய ஹீரோக்களுடன் போட்டி போட்டு வில்லனாக நடிக்க பலர் ஆரம்பித்து விட்டனர். அந்த வரிசையில் நடிகர் ஜெகபதி பாபு முன்னணி ஹீரோ என்ற பாதையில் இருந்து விலகி தற்போது முன்னணி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் தல, தளபதி, சூப்பர் ஸ்டார் என முன்னணி நடிகர்களுக்கு வில்லனாக நடித்துள்ளார்.
விஸ்வாசம்: அஜித், நயன்தாரா நடிப்பில் உருவான இத்திரைப்படத்தில் சிவா இயக்கி இருப்பார். இப்படத்தில் கௌதம் வீர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக ஜகபதி பாபு நடித்திருந்தார். இப்படம் மிக பெரிய வெற்றி பெற்றது.
பைரவா: பரதன் இயக்கிய பைரவா திரைப்படத்தில் பிகே ஜெயந்த் என்ற கதாபாத்திரத்தில் தளபதிக்கு வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
லிங்கா: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா,சந்தானம் என பல முன்னணி நடிகர்கள் நடித்த லிங்கா திரைப்படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடித்திருந்தார்.
அண்ணாத்த: சூப்பர் ஸ்டாரின் 168 வது படமான அண்ணாத்த திரைப்படத்தில் நயன்தாரா, மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லனாக ஜெகபதி பாபு நடித்துள்ளார்.
