வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

மகளைப் பார்த்து பூரித்துப் போய் ரஜினிகாந்த் வெளியிட்ட பதிவு.. லால் சலாம் வெற்றி பெறுமா.?

Rajinikanth was thrilled thinking about his daughter: என்ன தான் ரஜினி 170 படங்களுக்கு மேலாக நடித்து வெற்றியை கொடுத்து தற்போது சூப்பர் ஸ்டாராக ஜொலித்தாலும் தன் மகளின் படைப்புகளை பார்த்து பெருமிதம் படும்பொழுது கிடைக்கிற சந்தோஷமே வேற லெவல் தான். இதை தற்போது ரஜினிகாந்த் முழுமையாக உணர்ந்து அவருடைய மகிழ்ச்சியை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்து விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகிய லால் சலாம் படம் இன்று அனைத்து திரையரங்களிலும் வெளியாயிருக்கிறது. இதில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் இது ரஜினியின் படமாக தான் பார்த்து வருகிறார்கள். அதனால் தான் வழக்கம்போல் ரஜினி படங்களுக்கு கொடுக்க வேண்டிய ஆர்ப்பாட்டத்தை கொடுத்து வருகிறார்கள்.

Also read: போட்டி போடும் ரஜினியின் வாரிசுகள்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சூப்பர் ஸ்டார்

அந்த வகையில் இது ரஜினிக்கும் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கும் வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். இதற்கிடையில் ரஜினி அவருடைய இணையத்தில், என் அன்பு தாய் ஐஸ்வர்யாவுக்கு என் அன்பு சலாம். உங்களுடைய லால் சலாம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் அவர் பதிவிட்ட ட்விட்டரில் தன் மகள் ஐஸ்வர்யாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை போட்டு தந்தை மகளுக்கும் இருக்கும் பாசத்தை பகிர்ந்திருக்கிறார். ரஜினி ஒரு நாற்காலியில் அமர்ந்தபடி கால்களை மடக்கி ஹெட்போனை போட்டுக் கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய மகள் என்னை அரவணைப்புடன் பார்த்துக் கொள்கிறார் என்று அன்பை பகிர்ந்திருக்கிறார்.

rajinikanth tweet
rajinikanth tweet

Also read: சலாம் போட வைத்தாரா மொய்தீன் பாய்.? அனல் பறக்கும் லால் சலாம் ட்விட்டர் விமர்சனம்

Trending News