வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ரஜினி முகத்தில் காரி துப்பிய பாரதிராஜா.. சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு பின்னால் இருக்கும் உழைப்பு

Super Star Rajinikanth: சூப்பர் ஸ்டார் என்றாலே அது ரஜினிகாந்த் தான் என்ன தமிழ்நாடு மட்டும் இல்லாமல், உலகம் முழுக்க தெரியும் அளவுக்கு புகழ் பெற்றிருக்கிறார் நடிகர் ரஜினி. 72 வயதிலும் ஹீரோவாக நடிப்பதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் கெட்டியான கலெக்ஷனை நிரப்பி வருகிறார் இவர். 40 வருடங்களுக்கு முன்பு இவர் இப்படி ஒரு வெற்றியை பெறுவார் என்று சொல்லி இருந்தால் யாருமே நம்பி இருக்க மாட்டார்கள்.

இயக்குனர் பாலச்சந்தர் பிலிம் இன்ஸ்டியூட்டில் படித்துக் கொண்டிருந்த ரஜினியை அடையாளம் கண்டு தன்னுடைய படங்களில் நடிக்க வைத்தார். பாலச்சந்தரின் படங்களில் நடித்த ரஜினி தன்னுடைய சிறந்த நடிப்புத் திறமையை வெளிப்படுத்தினார். இருந்தாலும் இவர் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில் பல அவமானங்களையும் சந்தித்திருக்கிறார்.

Also Read:குட்டிப் பகை ஆடு உறவா.? குடும்ப சண்டை, ரஜினியை விட்டுக் கொடுக்காத மருமகன்.. உச்சி குளிர்ந்து போன சூப்பர் ஸ்டார்

ரஜினி பட்ட கஷ்டங்களை கூட தற்போது ரொம்பவும் நகைச்சுவையாக தன்னுடைய ரசிகர்களிடம் சொல்லி அவர்களை வாழ்க்கையில் ஜெயிக்க வைப்பதற்கு பேசுகிறார். வில்லனாகவும் பின்னர் ஹீரோவாகவும் பரிமாணமடைந்த ரஜினி கடந்து வந்த பாதை என்பது ரொம்பவே கஷ்டமான ஒன்று. ரஜினிக்கு சினிமா கேரியரில் அடையாளத்தை கொடுத்த திரைப்படம் 16 வயதினிலே.

16 வயதினிலே படத்தில் நடிப்பதற்கு ரஜினியின் மொத்த சம்பளம் 5 ஆயிரம் ரூபாய். இந்த படத்தில் அவருடன் நடித்த கமலஹாசன் மற்றும் ஸ்ரீதேவியின் சம்பளத்தை விட குறைவானதாக தான் வாங்கி இருக்கிறார். படம் முழுக்க தன்னுடைய ஸ்டைலான வில்லத்தனத்தை காட்டியிருப்பார் ரஜினி. இந்த படத்தில் இவர் பேசும் இது எப்படி இருக்கு வசனம் இன்றுவரை பிரபலம்.

Also Read:மொத்த படக்குழுவையும் முதலாளி ஆக்கி அழகு பார்த்த ரஜினி.. பாண்டியன் படத்தில் நடந்த சுவாரஸ்யம்

இந்த படத்தின் ஒரு காட்சியில் மயில் கேரக்டரில் நடித்த நடிகை ஸ்ரீதேவி ரஜினியின் முகத்தில் காரி துப்புவது போல் ஒரு காட்சி இருக்கும். இதில் அவர் முகத்தில் எச்சில் தெரிவதற்காக சோப்பு நிறைய கலக்கியிருக்கிறார்கள். அது சரியாக வராததால் ரஜினி, பாரதிராஜாவிடம் நீங்களே என் முகத்தில் துப்புங்கள், எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லி இருக்கிறார்.

பாரதிராஜாவும் ரஜினியின் முகத்தில் காரி துப்பி இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அந்த காட்சி வரவில்லையாம். அதற்கு ரஜினி நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் துப்புங்கள், நீங்கள் எதிர்பார்ப்பது போல் காட்சி வந்தால் போதும் என சொல்லி இருக்கிறார். கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு டேக்கிற்கு பிறகு தான் இந்த காட்சி ஓகே செய்யப்பட்டதாம். இப்படியெல்லாம் கஷ்டப்பட்டதால் தான் ரஜினி இன்று சூப்பர் ஸ்டார் என்ற உச்ச நிலையில் இருக்கிறார்.

Also Read:200 நாட்களுக்கு மேல் தியேட்டரில் கொடி கட்டி பறந்த ரஜினியின் 8 படங்கள்.. சூப்பர் ஸ்டாருக்கு போட்டி இவரே தான்

Trending News