செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

சரத்குமாருக்காக கதை எழுதிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. 24 வருடம் கழித்து சீக்ரெட் உடைத்த சுப்ரீம் ஸ்டார்

சுப்ரீம் ஸ்டார் சரத்குமாருக்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு கதை எழுதிய சுவாரசியமான சம்பவத்தை சரத்குமார் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஓபன் ஆக தெரிவித்துள்ளார். அந்த படம் பாட்ஷா படத்திற்கு பிறகு உருவாக இருந்ததாம்.

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் சரத்குமார். வில்லனாகவும் ஹீரோவாகவும் வெற்றிக் கொடி நாட்டியவர். ஆனால் கடந்த சில வருடங்களாக சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் படங்கள் எதுவுமே வெற்றி பெறவில்லை.

இதனால் தற்போது குணச்சித்திர வேடங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் இவ்வளவு ஏன் முன்னணி நடிகர்களுக்கு தந்தை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். அறுபது வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகர்களில் குறிப்பிட வேண்டிய ஒருவர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாட்ஷா படத்தின் வெற்றிக்கு பிறகு சொந்தமாகவே ஒரு கதையை எழுதினாராம். அதில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் நடிக்கவைக்க ஆசைப்பட்டாராம். ஒருமுறை சரத்குமாருக்கு ரஜினிகாந்த் போன் செய்து வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின்னர் உங்களுடன் இணைந்து ஒரு படம் பணியாற்ற ஆசையாக இருக்கிறது என்று கூறிவிட்டு, நமக்காக ஒரு கதையை எழுதி இருக்கிறேன் எனக் கூறினாராம். இருவருக்குமே அந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரமாம். கமல் மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த குருதிப்புனல் படத்தை போலவே இருந்ததாம் அந்த கதை.

rajinikanth-sarathkumar-cinemapettai
rajinikanth-sarathkumar-cinemapettai

மேலும் அந்த படத்தின் இயக்குனராக பாட்ஷா சுரேஷ் கிருஷ்ணாவிடம் பேசினாராம் சூப்பர் ஸ்டார். ஆனால் அதன் பிறகு சரத்குமார் மற்றும் ரஜினிகாந்த் இருவரும் சினிமாவில் வேறு வேறு படங்களில் தொடர்ந்து பிசியானதால் இந்த படம் கைவிடப்பட்டதாக கூறியுள்ளார். அதன்பிறகு கோச்சடையான் படத்தில் ரஜினி மற்றும் சரத்குமார் இணைந்து நடித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News