
Rajini : ரஜினிகாந்த் இப்போது லோகேஷின் கூலி படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்த நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.
கூலி படம் பான் இந்தியா படம் என்பதால் எல்லா மொழிகளில் உள்ள பிரபலமான நடிகர்களை இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறார் லோகேஷ். அதைவிட இதில் மற்றொரு சஸ்பென்சும் அடங்கி இருக்கிறது.
சமீபத்தில் தான் ஜனநாயகன் படத்தில் விஜய்யின் இயக்குனர்களான அட்லி, நெல்சன், லோகேஷ் கனகராஜ் மூவரும் நடிப்பதாக செய்தி வெளியானது. அதேபோல் ரஜினியின் கூலி படத்திலும் மூன்று இயக்குனர்கள் கேமியோ ரோலில் வருகின்றனர்.
கூலி படத்தில் இணைந்த ரஜினியின் 3 இயக்குனர்கள்

அதாவது ரஜினிக்கு மாஸ் ஹிட்டான பேட்ட படத்தை கொடுத்த கார்த்திக் சுப்புராஜ், வசூல் வேட்டையாடிய ஜெயிலரை இயக்கிய நெல்சன் மற்றும் கூலி படத்தை இயக்கும் லோகேஷ் ஆகியோர் ஒரு காட்சியில் இந்த படத்தில் நடிக்கின்றனர்.
அந்த புகைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அந்தப் புகைப்படத்தை எடுப்பதற்கு முன்பு ரஜினி எப்போதும் உண்டான தனது ஸ்டைலான சிரிப்புடன் “பேட்ட கூலி ஜெயிலர்” என்று கூறினாராம்.
மேலும் அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பில் ரஜினி கலந்து கொள்ள உள்ளார். இந்த படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது.