செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மகளுக்கே ரஜினி வைத்த பெரிய செக்.. தலைவர் போட்ட கண்டிஷனால் ஆடிப் போன லைக்கா

Actor Rajini: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக லைக்கா தயாரிப்பில் ஞானவேல் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்திலும் ரஜினி கமிட்டாகி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தான் தயாரிக்க இருக்கிறார்.

இந்நிலையில் இந்த படங்களுக்கு முன்னதாக ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்துள்ள லால் சலாம் படம் வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. பின்னணி வேலைகள் தான் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது.

Also Read : ரஜினிக்கு பரிந்து கொண்டு விஜய்யை வாரிவிடும் பிரபலம்.. 100 கோடி சம்பளம் தொட இதுதான் காரணம்

இந்த படத்தையும் லைக்கா சுபாஸ்கரன் தான் தயாரித்திருக்கிறார். ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுத்து விட வேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் கனவாக இருந்தது. அப்போது லால் சலாம் படத்தின் கதையை சொன்னபோது சூப்பர் ஸ்டாருக்கு பிடித்ததால் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டாராம்.

ஆனால் இந்த படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் சில காட்சிகளில் மட்டும் தான் ரஜினி வருவாராம். ஆரம்பத்தில் இந்த படத்திற்கான சம்பளம் பேசப்பட்ட போது ரஜினி தனக்கு சம்பளம் வேண்டாம் என்று கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்திருக்கிறார்.

Also Read : ஊருக்கு தான் துறவி வேஷம் போடும் ரஜினி.. கலாநிதி மாறனால் அல்லோல்படும் லைக்கா

ஆனால் அதன் பிறகு அவர் போட்ட கண்டிஷன் தான் தலையை சுற்ற வைத்திருக்கிறது. அதாவது லால் சலாம் படத்திற்கு சம்பளம் வேண்டாம் ஆனால் படம் ஓடிய பிறகு லாபம் அடைந்தால் அதில் சரி பங்கு சேர் வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதைக் கேட்டு லைக்கா ஆடிப் போய்விட்டதாம்.

ரஜினி இந்த படத்தில் கேமியோ தோற்றத்தில் மட்டும் நடித்துள்ள நிலையில் படம் வெற்றி பெற்றால் எப்படி சேர் கொடுப்பது என்று யோசித்து வருகிறார்கள். மேலும் சொந்த மகளின் படத்திலேயே ரஜினி இவ்வாறு கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனாலும் ரஜினிக்காக லைக்கா இதற்கு சம்மதம் தான் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read : ரஜினி, கமலுக்கு மட்டும் பச்சைக்கொடி.. சிம்பு, சூர்யா படம்னா தயாரிப்பாளர்களுக்கு வைக்கும் ஆப்பு

Trending News