28 வருடங்களுக்கு முன்னால் வந்த ரஜினியின் படம்.. இப்போதும் டிஆர்பியில் நம்பர் ஒன் இடம்

இப்போது மொபைல் போனிலேயே புதுப்படங்களை பார்க்கும் வசதி வந்தாலும் தொலைக்காட்சிகளில் விடுமுறை நாட்களில் போடும் படத்தையும் ரசிகர்கள் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்த்து மகிழ்ந்து வருபவர்களும் உண்டு. அதுவும் சூப்பர் ஸ்டார் படம் என்றால் எப்போதுமே டிஆர்பியில் முதல் இடத்தை தான் பெறும்.

அதனால் தான் பிரபல தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ரஜினியின் படத்தை வெளியிடுவார்கள். அதுவும் படையப்பா, முத்து போன்ற படங்களை எப்போது போட்டாலும் ரசிகர்கள் பார்ப்பார்கள். அதாவது 100 தடவை போட்டாலும் ரசிகர்களுக்கு அலுப்பே வராத படங்களாக உள்ளது.

Also Read : 3 ஜாம்பவான்கள் நடித்த ஒரே படம்.. அமிதாப்பச்சனுடன் ரஜினி, கமல் செய்த மகத்தான சாதனை

அந்த வகையில் 28 வருடங்களுக்கு முன்பு வெளியான ரஜினி படம் ஒன்று தற்போது வரை டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து பல படங்கள் வெளியானாலும் அதன் சாதனையை முறியடிக்க முடியவில்லை. அதுவும் ரஜினியின் திரை வாழ்க்கையை டைனிங் பாய்ண்ட் ஏற்படுத்திய படமும் அதுதான்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, ரகுவரன், நக்மா ஆகியோர் நடிப்பில் வெளியான பாட்ஷா படம் தான். இந்த படம் ரஜினி மற்றும் ரகுவரன் இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது. இதில் ரஜினியின் மாணிக் பாட்ஷா கதாபாத்திரம் மைல்கலாக அமைந்தது.

Also Read : இழுத்துக் கொண்டே போகும் ஜெயிலர்.. டென்ஷன் பண்ணும் ரஜினி, குழப்பத்தில் நெல்சன்

இந்தப் படத்தின் டிஆர்பியை உடைக்க தற்போது வரை எந்த படமும் வரவில்லை. பாட்ஷா படம் வெளியாகி கிட்டத்தட்ட 28 வருடங்கள் தாண்டியும் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இதுவரை வெளியான படங்கள் அதிக டிஆர்பியில் 11.79 ரேட்டிங் மற்றும் 9.48 மில்லியன் பார்வையாளர்களையும் பாட்ஷா படம் பெற்றுள்ளது.

தொலைக்காட்சி வரலாற்றிலேயே இந்த சாதனையை மற்ற டாப் நடிகரால் முறியடிக்க முடியவில்லை. எப்போதுமே ரஜினி தான் சூப்பர் ஸ்டார் என்பது இதன் மூலம் நிரூபணமாகி உள்ளது. பாட்ஷா போல் மற்றொரு படம் வருவது சாத்தியமா என்பது கேள்விக்குறி தான்.

Also Read : வெற்றியின் ரகசியத்தை கத்துக்கொடுத்த ரஜினி.. தனுஷ் 150 கோடி வீடு வாங்கிய ரகசியத்தின் பின்னணி