வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இமயமலை என தெரியாமல் மோதிப் பார்த்த 2 திமிங்கலங்கள்.. விஜய், அஜித் சேர்ந்து கூட தொட முடியாத ரஜினியின் முதல் நாள் வசூல்

டாப் நடிகர்களாக உள்ள விஜய் மற்றும் அஜித்தின் வாரிசு, துணிவு படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பொதுவாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதுமே வசூலை வாரி குவிக்கும். ஆனால் ஒரே சமயத்தில் இரண்டு நடிகர்கள் படம் வெளியாவதால் வசூலில் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.

ஆனால் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இந்த வருடம் மோதி பார்க்க வேண்டும் என்று விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு படம் ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதேபோல் வசூலும் எதிர்பார்த்த அளவு பெற்று வருகிறது.

Also Read : வம்சிக்கு ரூட்டு போட்டு கொடுத்த ரஜினி.. வாரிசு படத்திற்கு முன் உதாரணமே சூப்பர் ஸ்டாரின் இந்தப் படம் தான்

ஆனால் முதல் நாள் கலெக்ஷன் என்றாலே அது ரஜினி தான். அவரின் சாதனையை எந்த ஒரு நடிகராலும் தற்போது வரை முறியடிக்க முடியவில்லை. அவ்வாறு இமயமலையாக இருக்கும் ரஜினியின் சாதனையை முறியடிக்க விஜய் மற்றும் அஜித் இருவரும் முற்பட்டனர். ஆனால் கடைசியில் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.

ஏனென்றால் வாரிசு மற்றும் துணிவு படத்தின் வசூலை சேர்த்தால் கூட ரஜினியின் முதல் நாள் வசூலை அவர்களால் முறியடிக்க முடியவில்லை. அதாவது துணிவு படம் உலகம் முழுவதும் 53 கோடி வசூல் செய்தது. அதேபோல் விஜய்யின் வாரிசு படம் உலக அளவில் 45 கோடி வசூல் செய்தது.

Also Read : விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

இந்த இரண்டு படத்தின் வசூலை கூட்டினால் 98 கோடி தான் வருகிறது. ஆனால் சூப்பர் ஸ்டார் தன்னுடைய முதல் நாள் கலெக்ஷன் 100 கோடியை தாண்டி வைத்துள்ளார். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தின் முதல் நாள் வசூல் 110 கோடியாகும். தமிழ் சினிமாவில் முதல் நாள் கலெக்ஷனில் அதிக வசூல் ஈட்டிய படமாக இந்த படம் தான் தற்போது வரை நீடித்து உள்ளது.

இந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்றால் அது ரஜினியால் மட்டுமே முடியும். அடுத்ததாக நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் ஜெயிலர் படம் 2.0 படத்தின் முதல் நாள் வசூலை முறியடிக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also Read : கதையை மாற்ற சொன்ன ரஜினி.. போனி கபூர் உடன் இணையும் அசத்தல் கூட்டணி

Trending News