வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நெல்சன் மூலம் காய் நகர்த்திய சிவகார்த்திகேயன்.. என்னது இதுதான் அந்த ஜெயிலர் பட கதையா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு அடுத்த ரிலீஸ் ஆக திரைக்கு வர காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர். இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. மேலும் இந்த படத்தில் ஜெயிலராக ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். அவருடைய ரசிகர்களுக்கு இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது. மேலும் தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் இந்த படத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் போலீஸ் கதைகள் என்பது ரொம்பவும் பரிச்சயமான ஒன்று. அதுவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தையே ஒரு சில படங்களில் போலீஸாக நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இதுதான் முதன் முதலில் ஒரு ஜெயிலரை பற்றி வெளிவர இருக்கும் கதையாகும். படத்தின் காட்சிகள் பெரும்பாலும் ஜெயிலை மையமாக வைத்து தான் எடுக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரிகிறது.

Also Read:தலைவரை கை விடாமல் காப்பாற்றிய நெல்சன்.. மொத்தமாய் ஆடிப்போன சன் பிக்சர்ஸ்

தற்போது இந்தப் படத்தின் கதை பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெயிலர் படத்தின் கதைக்காக இயக்குனர்கள் நெல்சனுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்திருப்பதே நடிகர் சிவகார்த்திகேயன் தான். சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் இருவரும் நீண்ட வருட நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது நெல்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவதற்கு சிவா உதவி இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயன் அவருடைய அப்பா தாஸை பற்றி பல மேடைகளில் பேசி இருக்கிறார். அவருடைய கதையை படமாக்க வேண்டும் என்பது சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ஆசையாக இருந்திருக்கிறது. இதை நெல்சனிடம் சொல்லி நேரம் வரும்பொழுது இந்த கதையை நெல்சன் இயக்கி, சிவகார்த்திகேயன் நடிப்பதாக இருந்தது.

Also Read:மலையாள சினிமாவில் ரஜினி நடித்த 2 படங்கள்.. கமலுடன் இணைந்து போட்ட வெற்றி கூட்டணி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் நெல்சனுக்கு கால்ஷீட் கொடுக்கவே நெல்சன் எந்த கதையை எடுப்பது என்று திணறி இருக்கிறார். இறுதியாக சிவகார்த்திகேயனின் சம்மதத்தோடு அவருடைய அப்பாவின் கதையை ரஜினிகாந்திடம் கூறி சம்மதம் வாங்கி இருக்கிறார். ஜெயிலர் படத்தின் கதை நடிகர் சிவகார்த்திகேயனின் அப்பா தாஸின் வாழ்க்கையில் நடந்த சம்பவம் தான்.

ஜெயிலர் தாஸ் திருச்சி சிறையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஒரு குறிப்பிட்ட வழக்கிற்காக கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தத்தால் மாரடைப்பில் இறந்து விட்டார் என்பது அனைவரும் அறிந்த தகவல் தான். இந்த கதையில் சிவகார்த்திகேயன் முதலில் நினைத்தபடி அவரே நடித்திருந்தால் கூட அந்த அளவுக்கு வரவைற்ப்பை பெற்றிருக்காது. தற்போது சூப்பர்ஸ்டார் அந்த கதையில் நடிப்பது அவரே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் தான்.

Also Read:ரீ ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் 100 கோடி வசூல் படம்.. எல்லா இடத்திலும் தலைவர் கில்லி மாதிரி

Trending News