ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஜெயிலர் படத்தால் எகிறிய சம்பளம்.. விஜய்க்கு டஃப் கொடுக்க போகும் சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முமரமாக நடந்து வருகிறது. ஜெயிலர் படத்தில் நெல்சன் அப்படி என்னதான் செய்யப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் ரிலீஸ் வீடியோ வெளியாகி அதகலப்படுத்தியது.

இப்போது ரஜினியை கடந்த சில வருடங்களாக எந்த இயக்குனரும் இப்படி காட்டி இருக்க முடியாது. அதாவது இளமையுடன் கம்பீரமாக ரஜினி ஜெயிலர் படத்தில் காட்சியளிக்கிறார். இதைத்தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்திலும் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

Also Read : உச்ச நட்சத்திரங்களை பார்த்தாலே வெறுப்பாகும் இயக்குனர்.. ரஜினி, கமல் இல்லாமலேயே கொடுத்த ஹிட் படங்கள்

இந்நிலையில் ரஜினியின் சம்பளம் பல மடங்கு உயர இருக்கிறது. அதாவது ரஜினியின் முந்தைய படங்கள் தொடர் தோல்வி ஆனதால் தனது சம்பளத்தை குறைத்துக் கொண்டே வந்தார். எந்த டாப் நடிகரும் இதை செய்யாத நிலையில் ரஜினி மட்டும் தனது தயாரிப்பாளருக்காக செய்தார்.

இந்த சூழலில் லால் சலாம் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. அதேபோல் அடுத்ததாக ரஜினி மற்றும் ஜெய் பீம் இயக்குனருடன் இணையும் படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரிக்கிறது. சன் பிக்சர்ஸ் ஜெயிலர் படத்திற்கு கொடுத்ததை விட கூடுதலாக லைக்கா நிறுவனம் ரஜினிக்கு சம்பளம் பேசி உள்ளது.

Also Read : ரஜினியை திமிரில் திட்டிய வடிவுக்கரசி.. தண்டவாளத்தில் தலையை வைத்து விட்ட சம்பவம்.!

இந்நிலையில் இந்தப் படங்களை முடித்த கையோடு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இந்த படத்தை தயாரிக்க பிரபல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது. அதில் கலாநிதியின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் முதன்மையாக இருக்கிறது. மிகப்பெரிய பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கும் திட்டத்தில் உள்ளது.

மேலும் இந்த படத்திற்கு லோகேஷுக்கே கிட்டத்தட்ட 40 கோடிக்கு அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆகையால் ரஜினிக்கு 120 கோடியை தாண்டி சம்பளம் கொடுக்கப்பட இருக்கிறது. இதற்கு காரணம் லோகேஷ் கூட்டணி என்பதால் மட்டுமல்லாமல், ஜெயிலர் படத்தை பார்த்த சன் பிக்சர்ஸ் வியந்துள்ளதாம். இதனால் தான் கோடிகளை கொட்டி கொடுக்கிறது. இதன் மூலம் விஜய்யின் சம்பளத்தை விட அதிகபடியாக ரஜினி வாங்க இருக்கிறார்.

Also Read : ரீ ரிலீசுக்கு தயாராகும் ரஜினியின் 100 கோடி வசூல் படம்.. எல்லா இடத்திலும் தலைவர் கில்லி மாதிரி

Trending News