ரஜினியின் அண்ணாத்த படத்திற்கு சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்ற பாடல் சரியாக பொருந்தும் போல. அண்ணாத்த படம் ஆரம்பித்ததிலிருந்து ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகள். ஒருவழியாக எல்லாம் முடிந்தது என ஹைதராபாத் சென்றவர்களை கொரானா படாதபாடு படுத்தி திருப்பி அனுப்பிவிட்டது.
போதாக்குறைக்கு ரஜினிக்கு ரத்த அழுத்தத்தை வேறு கிளப்பி விட்டது. இது குறித்து ரஜினியிடம் என்னாச்சு அண்ணாத்த என கேட்டால், என்னத்த சொல்ல என்கிறார். ரத்த அழுத்தம் காரணமாக ரஜினிகாந்த் கண்டிப்பாக ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள் மருத்துவர்கள்.
சன் பிக்சர்ஸ் நிறுவனமும் ரஜினி எப்போது வருகிறாரோ அப்போதே படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறி விட்டார்களாம். இந்நிலையில் ஒரு வழியாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி விரைவில் முடித்து அடுத்த தீபாவளிக்கு வெளியிடலாம் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த நேரத்தில் திடீரென இடி விழுந்தது போல ஒரு அறிவிப்பு வந்துள்ளது. மணிரத்தினம் 250 கோடி பட்ஜெட்டில் உருவாக்கி கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் வெளியாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இரண்டு பாகமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் முதல் பாகத்திற்கான படப்பிடிப்புகள் 70 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், விரைவில் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தையும் முடித்துவிட்டு நேரடியாக தீபாவளிக்கு அண்ணாத்தேவை சந்திக்க வருகிறார் மணிரத்தினம்.
அரசியல் சலசலப்புக்கு பிறகு ரஜினி நடிப்பில் வெளியாகும் முதல் படமாக அண்ணாத்த உள்ளது. வசூல் ரீதியாக இந்த படம் எவ்வளவு வெற்றி பெறுகிறது என்பது ரசிகர்களுக்கு மிக முக்கியம். இந்த நேரத்தில் மணிரத்தினம் இப்படி சோதிக்கிறாரே என்கிறார்களாம் சன் பிக்சர்ஸ் வட்டாரங்கள்.