திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரஜினி செய்த பெரிய தவறு.. செருப்பால் அடிப்பேன் என்று சொன்ன பாலச்சந்தர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்த வருகிறார். ஆரம்பத்தில் தன்னை ஒரு ஹீரோவாக ஏற்றுக் கொள்வார்களா என்று பயந்தார் ரஜினி. தற்போது தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்ற இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் அவரின் குரு இயக்குனர் இமயம் கே பாலச்சந்தர் தான்.

அதாவது தமிழ் சினிமாவுக்கு உலகநாயகன் கமலஹாசன் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோரை கொடுத்தது பாலச்சந்தர் தான். தனது படங்களின் மூலம் இவர்களை மெருகேற்றி ஒரு உயர்ந்த இடத்தை அடைய செய்துள்ளார். இந்நிலையில் ரஜினி ஒரு பேட்டியில் பேசிய வீடியோ தற்போது அதிக பெயரால் பார்க்கப்பட்டு வருகிறது.

Also Read :தீபாவளி ரிலீஸ், அதிக எதிர்பார்ப்பை கிளப்பி, பல்ப் வாங்கிய 6 படங்கள்.. கமலை மிஞ்சிய ரஜினி

அதாவது பாலச்சந்தர் படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது தனக்கு பாலச்சந்தர் சாரிடம் போன் கால் வந்தது. அதாவது ஒரு காட்சி எடுக்க வேண்டும் உடனே வா என்று அழைத்துள்ளார். அப்போது ரஜினி குடித்திருந்ததால் அந்த வாசனையை மறைப்பதற்காக ஸ்பிரே அடித்த சென்றுள்ளார்.

அந்த காட்சி எடுத்து முடித்து விட்டனர். அதன்பின்பு ரஜினியை ரூமுக்கு வா என்று பாலச்சந்தர் அழைத்து பேசினாராம். நாகேஷை உனக்கு தெரியுமா என ரஜினியிடம் கேட்டாராம். உடனே தெரியும் என்ற ரஜினியும் கூறியுள்ளார். நாகேஷ் முன்னாடி நீ ஒரு இரும்பு கூட கிடையாது, அப்பேர்ப்பட்ட நடிகன் அவனே குடியால் தனது வாழ்க்கையை தொலைத்து விட்டான்.

Also Read :தீபாவளியன்று ரிலீசான 6 படங்கள்.. கமல், ரஜினியுடன் போட்டியிட்டு ஜெயித்த விஜயகாந்த், பாக்யராஜ்

இனிமே சூட்டிங் ஸ்பாட்டுக்கு குடித்துவிட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன் என ரஜினியை பாலச்சந்தர் எச்சரித்துள்ளார். அன்றிலிருந்து நான் குடிப்பழக்கத்தையே விட்டு விட்டேன் என்று அந்த பேட்டியில் ரஜினி கூறியிருந்தார். அவரால்தான் நான் இன்று இந்த நிலைமையில் உள்ளேன் என்று பெருமிதம் கொண்டார்.

இவ்வாறு பாலச்சந்தர் பல நடிகர்கள், நடிகைகளுக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார். அவரது படங்களிலும் இதே போன்று நிறைய தத்துவங்கள் இடம்பெற்றிருக்கும். மேலும் பாலச்சந்தர் இந்த மண்ணுலகை விட்டு சென்றாலும் அவரது படங்கள் மூலம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also Read :ரஜினிக்கு நன்மை செய்த எம்.ஜி்.ஆர்.. மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்

Trending News