தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் வெற்றியே ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்தந்த காலகட்டத்தில் எந்தெந்த இயக்குனர்கள் முன்னணியில் இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்து பணியாற்றுவதுதான்.
அப்படித்தான் தற்போது இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் அண்ணாத்த படத்திற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை இயக்க இளம் இயக்குனர்கள் தேசிங்கு பெரியசாமி, கமர்சியல் இயக்குனர் பாண்டிராஜ் போன்றோருக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இன்று இருக்கும் முன்னணி நடிகர்கள் கூட ரஜினியின் பழைய படங்களை ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் அஜீத் ஏற்கனவே பில்லா படத்தை ரீமேக் செய்து விட்டார். விஜய்க்கு ரஜினியின் மன்னன் படத்தை ரீமேக் செய்ய நீண்ட காலமாக ஆசை.
அதுமட்டுமில்லாமல் ரஜினியின் மருமகனும் தமிழ் சினிமாவின் தலைசிறந்த நடிகருமான தனுஷ் ரஜினியின் டைட்டில்களை தன்னுடைய படங்களில் பயன்படுத்தி வருகிறார். இப்படி ரஜினியின் செல்வாக்கை பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.
ரஜினியின் பில்லா படம் ரீமேக் செய்ததைப் பார்த்த சில தயாரிப்பாளர்கள் ரஜினியின் பழைய சூப்பர் ஹிட் படமான பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய ஆசைப்பட்டார்களாம். அது குறித்து ரஜினியிடம் கேட்ட போது அவர் சொன்ன பதில் தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
பில்லாவுக்கு அஜித் கிடைத்தது போல பாட்ஷா 2 படத்திற்கு மாணிக் பாட்சா கதாபாத்தில் நடிக்க ஆயிரம் ரஜினி கிடைக்கலாம், ஆனால் வில்லனாக நடித்த ரகுவரனின் மார்க் ஆண்டனி கதாபாத்திரத்திற்கு மாற்றே கிடையாது என ரகுவரனின் நடிப்பைப் பற்றி வியந்து சொன்னதாக பல தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.