Rajini : ரஜினியின் நடிப்பில் உருவாகி வருகிறது கூலி படம். லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கி வரும் நிலையில் இதில் நாகர்ஜுனா, சத்யராஜ், சவுபின் ஷாயிர், உபேந்திரா போன்ற மற்ற மொழி பிரபலங்கள் அனைவரும் சங்கமித்திருக்கின்றனர்.
ஏனென்றால் கூலி படம் பான் இந்திய மொழி படமாக உருவாகுவதால் மற்ற மொழிகளில் முக்கிய பிரபலங்களை இந்த படத்தில் நடிக்க வைத்து வருகின்றனர். இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் அமீர்கான் கூலி படத்தில் இடம்பெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த சூழலில் இன்று ரஜினி தனது பிறந்த நாளை கொண்டாடும் விதத்தில் கூலி படத்தின் அப்டேட் வெளியாகும் என்று சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது. அதன்படி இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.
அதன்படி கூலி படத்தின் சிக்கிடு வைப் என்ற பாடல் காட்சிகள் சில வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ள நிலையில் ரஜினி தனக்கே உண்டான ஸ்டைலில் சில ஸ்டெப்புகள் போட்டு இருக்கிறார்.
அதுவும் கையில் கர்ச்சிப்புடன் அவர் சுழன்றி அடித்து ஆடுகிறார். இந்த கிளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு பட குழுவினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் ஜெயிலர் படத்தின் அப்டேட் வெளியாகும் என்ற எதிர்பார்த்த நிலையில் அது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும் இந்த சிக்கிடு வைப் ரசிகர்களை குதூகலம் ஆகி இருக்கிறது.