ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

வியாபாரமாகாமல் கிடப்பில் கிடக்கும் ரஜினி படம்.. பொங்கல் ரிலீஸ் இல் இருந்து பின் வாங்கிய லால் சலாம்

Rajini In Lal Salaam: சும்மா பெயரை கேட்டாலே அதிருதில்ல என்பதற்கு ஏற்ப ரஜினியின் படங்கள் என்றாலே பலரும் எதிர்பார்ப்புகளை வைத்து பார்ப்பதற்கு காத்துக் கொண்டிருப்பார்கள். அந்த வகையில் ரஜினி படத்திற்கு எப்போதுமே தமிழ் சினிமாவில் மார்க்கெட் ஒய்யாரத்தில் தான் இருக்கும். அதனால் ரஜினி படத்தை போட்டி போட்டுக் கொண்டு வாங்குவதற்கு வரிசையில் அனைவரும் நிற்பார்கள்.

அதனாலேயே ரஜினியை ஒரு கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். காரணம் இவருடைய கேரக்டர் மூலமாக படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் ஒரு ஹைப்பை ஏற்படுத்தி விடும். அதுவே படத்திற்கு கிடைக்கும் மிகப்பெரிய பிரமோஷன் ஆக இருக்கும் என்ற ஒரு பிளானில் லால் சலாம் படம் எடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்தனையும் கனவாகவே போகும் அளவிற்கு இருக்கிறது.

காரணம் லால் சலாம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் பொங்கலுக்கு ரிலீசாகி விடும் என்று அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தார். அத்துடன் இப்படத்திற்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் அயலான், தனுஷின் கேப்டன் மில்லர் மற்றும் சுந்தர் சி-யின் அரண்மனை 4 படங்களும் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்த சூழலில் தற்போது லால் சலாம் படம் பொங்கலுக்கு ரிலீசாவது கொஞ்சம் சந்தேகம் தான்.

Also read: ரஜினியை பூஜை அறையில் வைத்து கும்பிட்ட விகே ராமசாமி.. காரணத்தைக் கேட்டு அதிர்ந்து போன திரையுலகம்

ஏனெனில் இப்படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கி விட்டார்கள். ஆனால் இன்னும் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை யாரும் வாங்குவதற்கு முன்வரவில்லை. அந்த வகையில் ரஜினி நடித்திருந்தும் இப்படத்திற்கு இந்த ஒரு நிலைமையை என்ற சொல்லும் அளவிற்கு போய்விட்டது. அதற்கு என்ன காரணம் என்றால் படத்தில் பெருசாக சொல்லும் அளவிற்கு விஷயம் எதுவும் தென்படவில்லை.

ஒரே ஒரு விஷயம் ரஜினி பொண்ணு எடுத்திருக்கிறது. அதில் கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்திருக்கிறார் என்பதை தாண்டி படம் நல்லா இல்லை என்பது தான் உண்மை. இது தெரிந்து கொண்டதால் இப்படத்தின் டிஜிட்டல் உரிமையை வாங்காமல் போய்விட்டார்கள். அதனால் வருகிற பொங்கல் அன்று லால் சலாம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை.

அந்த வகையில் அப்பாவை வைத்து வெற்றி பெற்று விடலாம் என்று கற்பனை கோட்டையை கட்டி வந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக முடிந்து விட்டது. இருந்தாலும் இதற்கு ஒரு தீர்வு கூடிய விரைவில் கிடைத்துவிடும். படத்துக்காக இல்லாவிட்டாலும் ரஜினிக்காகவது யாராவது வாங்க முன்வர வாய்ப்பு இருக்கிறது.

Also read: பாட்ஷா பட ஸ்டைலில் நிவாரணம் வழங்கும் ரஜினிகாந்த்.. குருன்னு சொல்ற சிஷ்யனுங்க கத்துக்கோங்க!

Trending News