வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

ஜெயிலர் படமே இல்லை, தங்கப்பதக்கம் காப்பி.. படத்தைப் பார்க்காமல் பாதியிலேயே எழுந்து போன ரஜினி நண்பர்

Rajini Friend Criticized The Jailer Film: 72 வயதிலும் நான் தான் சூப்பர் ஸ்டார் என ஒவ்வொரு படத்திலும் எனர்ஜி குறையாமல் நடித்துக் கொண்டிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இளம் தலைமுறைகளுக்கெல்லாம் சவால் விடும் வகையில் அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார்.

சமீபத்தில் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் பாக்ஸ் ஆபிஸில் வசூலில் பட்டையைக் கிளப்பியது  ஆனால் இந்த படம் ஒரு படமே கிடையாது, சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்தின் அட்ட காப்பி என்று ரஜினியின் நண்பரே மோசமாக விமர்சித்து இருக்கிறார்.

டைரக்டராக இருந்து நடிகராக மாறியவர் தான் ரமேஷ் கண்ணா. இவர் ரஜினியுடன் முத்து, படையப்பா, கோச்சடையான் போன்ற படங்களில் அவருடன் இணைந்து பணியாற்றியவர். இவர் ரஜினியின் நண்பராக இருந்து கொண்டு அவருடைய படத்தையே விமர்சித்திருக்கிறார்.

Also read: சந்தேகப்பட்ட ரஜினி, வளைத்து போட்ட சிம்பு .. விட்டதை பிடிக்க ஆட்டத்திற்குள் வந்த ஆண்டவர்

தற்போது அளித்த பேட்டியில் ரமேஷ் கண்ணா, ஜெயிலர் படத்தை படமே இல்லை என்று கூறியிருக்கிறார். சிவாஜி நடிப்பில் வெளியான தங்கப்பதக்கம் படத்தின் அட்ட காப்பி தான் ஜெயிலர். ஆனா தங்கப்பதக்கம் எப்படிப்பட்ட படம்.

ஜெயிலரில் என்ன இருக்கு, எல்லாரையும் ஷூட் பண்ற ரஜினி, கடைசில பெத்த மகனையும் ஷூட் பண்றாரு அவ்வளவுதான். இந்த படத்தை ஆகா ஓகோன்னு புகழ்ந்ததால் படத்தை பார்க்க தியேட்டருக்கு போனேன்.

ஆனா படத்தை முழுசா பார்க்கவே பிடிக்கல. பாதியில் இருந்து எழுந்து வந்து விட தோன்றியது. இப்போ எல்லாம் ஆக்சன் என்று சொல்லி நம்மள எல்லா இயக்குனர்களும் கொன்னுட்டு இருக்காங்க என்று ரமேஷ் கண்ணா ஆதங்கத்துடன் பேசினார்.

Also read: ஏவிஎம்-ஐ மீட்டெடுக்கும் முயற்சியில் கமல், ரஜினி.. 80 வருட சாம்ராஜ்யத்தின் கடைசி படம்

Trending News