செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஜெயிலரை ஒரு கை பார்த்துவிட்டு ரஜினி செய்யும் வேலை.. ஏர்போர்ட்டில் சிக்கிய சூப்பர் ஸ்டார்

அண்ணாத்த படத்திற்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலைப்போல் நம்பி இருக்கும் படம்தான் நெல்சன் திலிப் குமார் இயக்கும் ஜெயிலர். கிட்டத்தட்ட ஜெயிலர் படம் முடிவுக்கு வந்துவிட்டது. படத்தில் ரஜினி ஒரு காட்டு காட்டி இருக்கிறார்.

இப்பொழுது கிடைத்த கொஞ்சம் இடைவேளையில் இந்த முறை வித்தியாசமாக யோசித்து கிளம்பிய சூப்பர் ஸ்டார் செய்தியாளர்களிடம் ஏர்போர்ட்டில் சிக்கிவிட்டார். எங்கே செல்கிறார் என்று ஒரு கூட்டம் அலசி ஆராய்ந்தது. ரஜினி புத்துணர்ச்சிக்காக கேரளா சென்று ஆயுர்வேத மசாஜ் சென்றுள்ளார் என்று கூறப்பட்ட நிலையில், ஆனால் ரஜினி கேரளா போகவில்லை.

Also Read: ரஜினி, கமலை ஓரங்கட்டிய நடிகர்.. ஒரு மணி நேரத்திற்கு வாங்கிய சம்பளம்

அவர் பெங்களூரு புறப்பட்டு உள்ளார். அங்கே ஸ்ரீ ஸ்ரீ ரவிச்சந்தர் ஆசிரமம் இருக்கிறது . அங்கே போய் யோகா மற்றும் புத்துணர்ச்சி பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இடைவிடாத யோகா மற்றும் தியானம் செய்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் தன்னுடைய படங்களை முடித்த உடனேயே இமயமலைக்கு சென்று பாபா குகையில் தியானம் செய்வதை வழக்கமாக வைத்திருப்பார்.

ஆனால் அவருடைய உடல்நிலை இப்போது ஒத்துழைக்காததால் இமயமலைக்கு அடிக்கடி செல்ல முடியாமல் புத்துணர்ச்சிக்காக சூப்பர் பிளான் போட்டு தான் இப்போது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஆசிரமம் போயிருக்கிறார். அங்கு அவர் தேடும் அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைப்பதால் இந்த முறை அந்த ஆசிரமத்தை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

Also Read: தர்பார் பட தோல்விக்கு அவர்தான் காரணம்.. நொண்டி சாக்கு சொல்லி எஸ்கேப்பான ஏ.ஆர்.முருகதாஸ்

ஏற்கனவே சமீபத்தில் தான் பெங்களூருக்கு சென்ற ரஜினி அவருடைய அண்ணன் சத்திய நாராயணனின் 80-வது ஆண்டு பிறந்த நாளை சிறப்பித்தார். அப்போது எடுத்த புகைப்படங்களும் சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. அதனால் அதே பெங்களூரில் இருக்கும் ஆசிரமத்திற்கு மீண்டும் ரெஃப்ரெஷ் ஆக சென்றிருக்கிறார்.

அங்கிருந்து சில தினங்களில் மறுபடியும் சென்னை திரும்பும் சூப்பர் ஸ்டார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கிறார். அதன் பின் லைக்கா தயாரிப்பில் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: தினக்குடிக்கு மோசமாக அடிமையான 5 நடிகர்கள்.. பொண்டாட்டியால் உயிர் பிழைத்த ஸ்டார் நடிகர்.!

Trending News