திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அண்ணாத்த படத்திற்காக ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. தலைவர் தலைவர்தான்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலகுறைவு மற்றும் அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சுறுசுறுப்புடன் படங்களில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரஜினி நடிப்பில் கடைசியாக உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் தான் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் ரஜினியின் எவர்கிரீன் ஜோடிகளான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் திடீரென சிலருக்கு குரானா தொற்று ஏற்பட்டு அதன் காரணமாக படப்பிடிப்பு பாதியில் விடப்பட்டது.

தற்போது மீண்டும் விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக ரஜினி கூறாமல் அண்ணாத்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது ரஜினியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நேரடியாக பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி ரஜினி அண்ணாத்த படக்குழுவினருடன் இணைய உள்ளாராம். சில நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்துவிட்டு நேரடியாக பொள்ளாச்சியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

annaatthe-cinemapettai
annaatthe-cinemapettai

2021 தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அண்ணாத்தே படத்தை விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் ரஜினி அடுத்த படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அரசியல் இல்லை என்றாலும் சினிமாவில் மூச்சுள்ள வரை இருப்பேன் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம்.

Trending News