1981 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் நெற்றிக்கண். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக லட்சுமி மற்றும் சரிதா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.
கே பாலச்சந்தர் திரைக்கதை எழுத எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்த இந்த படமே கொஞ்சம் சர்ச்சையான படம்தான். வயதான ரஜினிக்கு முற்றிலும் நெகட்டிவ் கதாபாத்திரம். ஆனால் தன்னுடைய ஸ்டைலான நடிப்பால் மிரள விட்டிருப்பார்.
இந்நிலையில் தற்போது நெற்றிக்கண் படத்தை தமிழில் மீண்டும் முன்னணி நடிகரை வைத்து ரீமேக் செய்ய பல நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த நடிகராக இருந்தால் சவுகரியமாக இருக்கும் என்கின்றனர்.
ஏற்கனவே ரஜினியின் பில்லா படத்தின் ரீமேக்கில் நடித்து வெற்றி கொடுத்த அஜித் நெற்றிக்கண் படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என விரும்புகிறார்களாம். ஏற்கனவே அஜீத் ரஜினியின் நெற்றிக்கண் பட ரீமேக்கில் நடிக்க ஆர்வம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த கூட்டணி மட்டும் அமைந்தால் கண்டிப்பாக படம் பிளாக்பஸ்டர் வெற்றிபெறும் எனவும், வசூல் ரீதியாக மிகப்பெரிய உச்சத்தை தொடும் எனவும் கோலிவுட் வட்டாரங்களில் இப்போதே பேச்சுகள் எழுந்துள்ளன.
ஆனால் சமீப காலமாக அஜித் பெண்கள் மத்தியில் மரியாதைக்குரிய நடிகராக வலம் வரும் இந்த நேரத்தில் நெற்றிக்கண் ரீமேக் படத்தில் நடிப்பாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆக மொத்தத்தில் அஜித்தை தவிர இந்த படத்தில் யார் நடித்தால் செட் ஆகாது என கூறி வருகிறார்களாம். தல ஓகே சொல்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.