நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருக்கும் ஜெயிலர் படம் 90% முடிந்து விட்டது. இன்னும் கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் பாக்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து லால் சலாம் படம் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருக்கிறது. இந்த இரண்டு படங்களிலும் தொடர்ந்து நடித்ததால் கொஞ்சம் ரெஸ்ட் வேணும் என்று ஒரு மாதம் ஓய்வு கேட்டிருக்கிறார்.
ஆனால் தலைவரின் அடுத்த படத்தை இயக்க இருக்கும் இயக்குனர் ஞானவேல் ராஜா அதற்கெல்லாம் நேரமில்லை. இப்பொழுது சூட்டிங் ஆரம்பித்தால் மட்டுமே சரியாக இருக்கும். அப்போதுதான் இந்த வருட கடைசியில் படத்தை முடித்துவிட்டு வெளியிட முடியும் என்று திட்டவட்டமாக ரஜினி இடம் கூறியிருக்கிறார்.
இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் ரஜினியும் உடனே ஓகே சொல்லி அடுத்த படத்திற்கு ரெடியாகிவிட்டார். ஏனென்றால் இயக்குனர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே ரஜினியிடம் கதையை கூறி அவரின் சம்மதத்தையும் வாங்கி இருக்கிறார். அதனால் ரொம்ப காக்க வைத்து விட்டோம் என்று இயக்குனர் சொன்னதும் சரி என்று சொல்லிவிட்டார்.
இதற்கிடையில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெய் பீம் திரைப்படம் உலகம் முழுவதும் பல பாராட்டுகளையும், விருதுகளையும் வென்றது. அத்துடன் இவருடைய கதை சமூக அக்கறை உள்ள படமாகவும் உண்மையான கதாபாத்திரங்களின் அடிப்படையாகக் கொண்ட படமாகவும் தான் இருக்கும் என்பதால் ரஜினிக்கு அதிக அளவில் இவர் ஈர்க்கப்பட்டார்.
மேலும் இயக்குனரின் எண்ணமே இப்படத்தை மே மாதத்தில் ஆரம்பித்து டிசம்பரில் முடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காக ஒரு விதத்தில் ரஜினிக்கு நெருக்கடியும் கொடுத்திருக்கிறார். ஆனாலும் இந்த இயக்குனரை விட்டு விடக்கூடாது என்று ரஜினி ரெஸ்ட்டே வேண்டாம் கதை தான் முக்கியம் என்று இவருடன் கைகோர்க்கிறார்.
இதனால் ஞானவேல் ராஜா இயக்கத்தில் ரஜினியின் புதிய அவதாரத்தை நாம் பார்க்கலாம். கண்டிப்பாக இவர்கள் கூட்டணியில் உருவாக இருக்கும் படம் வெற்றியை தான் கொடுக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இயக்குனரின் கதையும், ரஜினியின் நடிப்பும் எப்படி இருக்கும் என்று நாம் அனைவரும் அறிந்ததே.