45 வருஷமாக உடைக்க முடியாத ரஜினியின் சாதனை.. மிரண்டு போன திரையுலகம்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வரை 168 படங்களில் நடித்து அசத்தியுள்ளார். 1975 ஆம் ஆண்டில் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் வில்லனாக களமிறங்கிய சூப்பர்ஸ்டார், தொடர்ந்து பல படங்களில் கதாநாயகன், வில்லன் என மிரட்டி இருப்பார்.இவரது ஸ்டைல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தொடர்ந்து பல இயக்குனர்கள் கமிட் செய்தனர்.

தற்போது இயக்குனர் நெல்சனின் ஜெயிலர் படத்தில் நடித்து வரும், சூப்பர்ஸ்டாரின் பஸ்ட் லுக் போஸ்டர் மாஸாக வெளியானது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட்டாகி வரும் ரஜினிகாந்த், வருடத்திற்கு ஒரு படம் மட்டும் ரிலீசாவதே பெரிய விஷயாமாகி உள்ளது. அப்படி ரிலீசாகும் படங்களுக்கு ரசிகர்கள் செய்யும் ஆர்ப்பாட்டமும்,ஆர்பரிப்புக்கும் எல்லை இல்லாதது.

Also Read: ராகவேந்திரா சாமிக்கு பின் சூப்பர்ஸ்டார் மதிக்கும் சாமி இதுதான்.. வெளிப்படையாக மேடையில் பேசிய ரஜினி

வருடத்திற்கு ஒருமுறை தான் சூப்பர்ஸ்டாரை திரையரங்குகளில் தரிசிக்க முடியும் என்பதால் ரசிகர்கள் தங்களையே மறந்து மேள தாளங்கள் முழங்க, பட்டாசுகள் வெடிக்க தலைவர், தலைவர் என ஆர்ப்பரித்து வருவார்கள். இதில் சூப்பர்ஸ்டாரின் படங்கள் ஹிட்டானாலும், ஆகாவிட்டாலும் 50 நாட்களை கடந்து திரையரங்குகளில் பட்டையை கிளப்பும்.

2022 ஆம் ஆண்டில் சூப்பர்ஸ்டாரின் நடிப்பில் ஒரு படம் கூட ரிலீஸாகாத நிலையில், 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் படத்தை பார்க்க ஆவலுடன் உள்ளனர். இதனிடையே இவ்வளவு உச்சம் அடைந்த சூப்பர்ஸ்டாரின் ஆரம்பக் கால சினிமா வாழ்க்கையில் வருடத்திற்கு குறைந்தது 3லிருந்து 5 படங்களாவது கொடுத்துவிடுவார். ஆனால் 1978 ஆம் ஆண்டு மட்டும் வரிசையாக பல படங்களில் நடித்தார்.

Also Read: பெரிய மனுஷனாய் நடந்து கொண்ட சூப்பர்ஸ்டார்.. யாரும் நஷ்டப்படாமல் அப்பவே ரஜினி செய்த பேருதவி

அதில் முக்கியமாக பைரவி ,இளமை ஊஞ்சலாடுதே, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல தமிழ் படங்களுடன் தெலுகு, கன்னடம் உள்ளிட்ட படங்களிலும் சூப்பர்ஸ்டார் அந்த ஆண்டில் நடித்து சாதனை படைத்தார். இதில் முக்கியமாக காளி படத்தில் ரஜினிகாந்த் நடித்தற்காக சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு ஸ்டேட் விருதும் கிடைக்கப்பெற்றது.

அந்த ஆண்டில் மட்டுமே 21 படங்களில் நடித்த சூப்பர்ஸ்டார் வேறு எந்த வருடத்திலும் இந்த அளவுக்கு படங்களில் நடிக்கவில்லை. இந்த படங்கள் ஒவ்வொன்றும் ரஜினியின் சினிமா வாழ்க்கையை மெருகேற்றிய படங்களாகும். சில படங்களில் வில்லனாகவும், ஹீரோவாகவும், இரட்டை கதாபாத்திரத்திலும் அந்த ஆண்டில் நடித்தார். இனிமேல் ரஜினியே நினைத்தாலும் ஒரே வருடத்தில் இவ்வளவு படங்களில் அவரால் நடிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஷங்கர் படத்தையே வேண்டாமென உதறிய சூப்பர்ஸ்டார்.. எனக்கே ஸ்கெட்ச்சா!

 

Next Story

- Advertisement -