Actor Jailer: சமீபத்தில் திரையில் வெளியாகி வசூலில் பட்டைய கிளப்பி வரும் ஜெயிலர் படத்தை கொண்டாடி வரும் வேளையில், பல கோடி லாபத்தை பார்த்து வரும் இப்படத்தில் ரஜினி வாங்கிய உண்மையான சம்பளம் குறித்த தகவலை பற்றி இத்தொகுப்பில் காணலாம்.
நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் படத்தின் வசூல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தான் இருக்கிறது. ஆரம்பத்தில் இப்படத்தில் ரஜினி சம்பளமாக 80 கோடி வாங்கியதாக கூறப்பட்ட நிலையில், எதற்கு இவ்வளவு குறைவாக சம்பளத்தை வாங்கினார் என்ற கேள்வியும் எழு தொடங்கியது.
Also Read: டார்க் காமெடிக்கு தரமான ஹீரோவை தட்டி தூக்கிய நெல்சன்.. சிரிப்புக்கு பஞ்சமே இருக்காது, மாஸ் கூட்டணி
அண்ணாத்த படம் மேற்கொண்ட போது ரஜினியின் சம்பளம் 100 கோடி. அவ்வாறு இருக்க தற்போது இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் வெறும் 80 கோடியா என ஒரு சந்தேகம் எழுந்தது. ஆனால் ரஜினி பணம் விஷயத்தில் கெட்டிக்காரர் என்பதை மீண்டும் நிரூபித்து விட்டார்.
ஜெயிலர் படத்தின் சம்பளத்தை வாங்கும் பொழுது, தயாரிப்பாளரிடம் வெற்றி பெற்றால் அதில் எனக்கு லாபத்தில் பங்கு வேண்டும் என முன்னரே கேட்டு உள்ளாராம். மேலும் தயாரிப்பாளரும் வெற்றி பெற்றால் பார்த்துக் கொள்ளலாம் என நினைத்திருக்கிறார்.
அதை தொடர்ந்து படமும் சக்கை போடு போட்டு வரும் நிலையில் அவ்வளவு எளிதாக ரஜினி விட்டு விடுவாரா என்ன? தற்பொழுது லாபத்தில் ஷேர் கேட்டு வருகிறாராம். படம் வெளிவந்து 11 நாட்கள் ஆகும் நிலையில் இதனின் வசூலும் குறையாமல் போய்க்கொண்டே தான் இருக்கிறது.
அவ்வாறு இருக்க, இதுவரை இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் சுமார் 550 கோடியை கண்டுள்ளது. அதைக் கொண்டு லாபத்தில் ஷேர் ஆய் சரிபாதி சுமார் 200 கோடியை சம்பளமாக பெற்றுள்ளாராம். இவரின் இத்தகைய சம்பள உயர்வு, சினிமா வட்டாரங்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.