Rajini : ரஜினி லால் சலாம் படத்திற்குப் பிறகு இப்போது வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் பிரம்மாண்ட பொருட் செலவில் எடுத்து வருகிறது.
இதற்கு அடுத்தபடியாக ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகிறது தலைவர் 171. எப்போதும் போல லோகேஷின் இந்த படத்திலும் அனிருத் தான் இசையமைக்கிறார். மேலும் சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இன்று காலை முதலே டுவிட்டரில் தலைவர் 171 என்ற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது.
அதாவது லோகேஷ் தனது ட்விட்டர் தளத்தில் இன்று மாலை 6:00 மணி என குறிப்பிட்டு இருந்தார். அதன்படி தலைவர் 171 அப்டேட் இன்று வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். அதன்படி தலைவர் 171 படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் இப்போது வெளியாகி இருக்கிறது.
கூலிங் கிளாஸ் உடன் 80ஸ் ரஜினி
எப்போதுமே லோகேஷ் பட போஸ்டர் மற்றும் வீடியோக்களை பார்க்கையில் ரத்தம் தெறிக்கும்படி இருக்கும். ஆனால் இப்போது வந்திருக்கும் போஸ்டர் குதூகலமாக இருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூலிங் கிளாஸ் உடன் 80 களில் உள்ளது போல் இருக்கிறார்.
மேலும் கையில் இருக்கும் வாட்சையே கை விலங்கு போல ரஜினி போட்டிருக்கிறார். அதாவது இந்த படத்தில் ரஜினி இதுவரை பார்த்திடாத அளவுக்கு பயங்கர வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அதை வெளிப்படுத்தும் விதமாகத்தான் லோகேஷ் இவ்வாறு செய்துள்ளார்.
அதோடு வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி தலைவர் 171 படத்திற்கான டைட்டில் டீசர் வெளியாக இருக்கிறது. மேலும் இந்த போஸ்டர் இப்போது ரஜினி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
ரஜினியின் தலைவர் 171 போஸ்டர்
