திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

ஜெயிலரை மிஞ்சும் தலைவர் 171.. இணையத்தில் கசிந்த டைட்டில்

Actor Rajini : சூப்பர் ஸ்டார் ஜெயிலர் வெற்றியைத் தொடர்ந்து இப்போது ஹீரோவாக வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்ததாக ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் தலைவர் 171 படம் உருவாக இருக்கிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவாக உள்ள இந்தப் படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது.

அதாவது ரஜினியின் கையில் வாட்சுகள் கைவிலங்கு போல் கட்டப்பட்டிருந்தது. மேலும் இன்று காலை முதலே ட்விட்டரில் தலைவர் 171 டைட்டில் ரிவில் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே லோகேஷ் யாரும் ரஜினியை இதுவரை பார்த்திராத கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறியிருந்தார்.

இணையத்தில் கசிந்த தலைவர் 171 டைட்டில்

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன், பாலிவுட் நடிகர்கள் என பலர் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டிருக்கிறது. ரஜினியின் பட டைட்டில் எப்போதுமே ரசிகர்களை கவரும் வகையில் இருக்கும்.

அதன்படி தலைவர் 171 படத்திற்கு கழுகு, ராணா, தலைவன் ஆகிய டைட்டிலில் ஏதாவது ஒன்றுதான் இருக்கும் என இப்போது இணையத்தில் தகவல் கசிந்து இருக்கிறது. ஜெயிலர் படம் வெளியான சமயத்தில் காக்கா, கழுகு என பிரச்சனை போய்க்கொண்டிருந்தது.

இப்போது தலைவர் 171 படத்திற்கு கழுகு என்ற டைட்டில் மட்டும் வைத்திருந்தால் கண்டிப்பாக இதுவே மிகப்பெரிய சர்ச்சையை உண்டாக்கும். ஆகையால் ரஜினி மற்றும் லோகேஷ் இருவரும் எந்த டைட்டிலை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

Trending News