ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஆயுத பூஜையில் குறைந்த வேட்டையன் வசூல்.. 2வது நாள் கலெக்சன் ரிப்போர்ட்

Vettaiyan 2nd day collection: ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் வேட்டையன் படம் கடந்த அக்டோபர் 10 தியேட்டரில் வெளியாகி இருந்தது. பொதுவாகவே பண்டிகை நாட்களை குறி வைத்ததால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும். அதேபோல் தொடர் விடுமுறையை கணக்கிட்டு இந்த படமும் ரிலீஸ் ஆகி இருந்தது.

நேற்றைய தினம் ஆயுத பூஜை என்பதால் மக்கள் கூட்டம் குடும்பத்தோடு தலைவர் படத்தை பார்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் நாளை விட மிகக் குறைந்த வசூலையே இரண்டாவது நாளில் வேட்டையன் படம் பெற்றிருக்கிறது.

டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ரஜினி, அமிதாப்பச்சன், பகத் பாஸில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர் மற்றும் ரித்திகா சிங் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். அனைவரது நடிப்பையுமே பாராட்டும் அளவுக்கு அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தனர்.

வேட்டையன் இரண்டாவது நாள் கலெக்ஷன்

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஆக நடித்திருந்தார். ஆனால் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றிருந்தது. இந்த சூழலில் முதல் நாளில் 31.7 கோடி இந்தியா முழுவதும் வேட்டையன் படம் வசூல் செய்திருந்தது.

நேற்று தமிழகத்தில் மட்டும் 21.35 கோடி வசூலை பெற்றது. தெலுங்கில் 2 கோடியும், பாலிவுட்டில் 0.4 கோடியும், கன்னடத்தில் 0.5 கோடியும் வசூல் செய்திருக்கிறது. மொத்தமாக இதுவரை இந்தியா முழுவதும் வேட்டையன் படம் 55.5 கோடி வசூலை பெற்றிருக்கிறது.

வேட்டையன் படம் கிட்டத்தட்ட 200 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் இரண்டு நாட்களில் 50 கோடியை தாண்டி இருக்கிறது. இன்னும் சில நாட்களில் போட்ட பட்ஜெட்டை லைக்கா எடுத்துவிடும். ஆனால் எதிர்பார்த்த லாபம் கிடைப்பது சந்தேகம்தான்.

Trending News