சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

சும்மா அலறவிட்ட தலைவர்.. ட்ரெண்டாகும் வேட்டையன் ட்ரெய்லர்

Vettaiyan : ஜெய் பீம் படம் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் உருவாகி இருக்கிறது வேட்டையன் படம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாபச்சன், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், பகத் பாசில், ரித்திகா சிங் என எக்கச்சக்க பிரபலங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

ரஜினி இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் வெளியாகி பட்டிதொட்டி எங்கும் பரவியது. பொதுவாகவே அனிருத் ரஜினிக்கு மாஸ் ஹிட் பாடல்கள் கொடுத்து வருகிறார். அந்த வகையில் வேட்டையன் படத்திலும் தரமான பாடல்கள் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு வருகின்ற அக்டோபர் 10ஆம் தேதி வேட்டையன் படம் தியேட்டரில் வெளியாக இருக்கிறது. இந்த சமயத்தில் திடீரென ரஜினியின் உடல் நிலையில் பிரச்சனை ஏற்பட்டதால் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

ரஜினி நலமுடன் இருக்கிறார் என்ற செய்தி வந்துள்ளது. இந்த சூழலில் வேட்டையன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டு இருக்கிறது. இந்த ட்ரெய்லரில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதிகள் பற்றியும் ஞானவேல் கூறியிருக்கிறார்.

அதோடு போலீஸ் அதிகாரியாக இருக்கும் ரஜினி பல ரவுடிகளை வெளுத்து வாங்கும் ஆக்ஷன் காட்சிகள் படத்தில் எக்கச்சக்கம் இடம்பெற்றிருக்கிறது. மேலும் ரஜினிகாந்த் வில்லனாக அமிதாப் பச்சன் இந்த படத்தின் நடித்துள்ளார்.

ரணகளமாக உருவாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் இப்போது தலைவர் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வருகிறது. தமிழ்நாட்டில் தலை விரித்தாடும் பல பிரச்சனைகளை இந்த படத்தில் மூலம் இயக்குனர் சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக ரசிகர்களுக்கு செம விருந்தாக வேட்டையன் படம் இருக்கப் போகிறது.

வேட்டைக்கு தயாரான ரஜினி

Trending News