Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், தான் உண்டு தன் வேலை உண்டு என்று பாண்டியன் தன்னுடைய குடும்பத்திற்காக இரவும் பகலும் படாதபாடு பட்டு குடும்பத்தை கட்டி காத்து வருகிறார். ஆனால் தற்போது எதிர்பார்க்காத அளவிற்கு பாண்டியனின் தலையில் இடியை இறக்கும் அளவிற்கு ராஜியின் குடும்பம் சதி செய்ய போகிறது.
அதாவது சக்திவேலுவின் மகன் குமரவேலுக்கு வெளியே எங்க தேடியும் பொண்ணு கிடைக்கவில்லை. அதனால் சக்திவேல், பாண்டியனின் மகளான அரசியை குமரவேலு கல்யாணம் பண்ணிவிட்டால் தன் மகனுக்கு கல்யாணமும் முடிந்த மாதிரி ஆகிவிடும். பாண்டியனையும் பழி வாங்குவதற்கு நல்ல சந்தர்ப்பம் கிடைத்துவிடும் என்பதற்காக குமரவேலுவின் மனசில் வன்மத்தை விதைத்து அரசியை கல்யாணம் பண்ண சொல்லிவிட்டார்.
இதனால் குமரவேலு, அரசின் பின்னாடி சுற்றி எப்படியாவது மனசை மாற்றி கல்யாணம் பண்ண வேண்டும் என்று சில சூட்சமங்களை பண்ணினார். கடைசியில் அரசி கழுத்தில் கட்டாய தாலி கட்டும் விதமாக குமரவேலு தாலி கட்டி விடுகிறார். இதற்கெல்லாம் காரணம் கோமதி, அண்ணன் குடும்பத்திற்கு இறக்கப்பட்டு ராஜியை கதிருக்கு கல்யாணம் பண்ணி வைத்தது தான்.
அதனால் தான் பழிவாங்க தற்போது அரசி பகடைக்காயாக சிக்கிக்கொண்டார். இந்த எபிசோடு கூடிய விரைவில் வரப்போகிறது, ஆனால் அதற்கு முன் அரசி கழுத்தில் தாலி கட்டிய புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி இருக்கிறது. அதாவது பாண்டியன் வீட்டிற்கு மருமகளாக வந்த தங்கமயில், மீனா மற்றும் ராஜி கழுத்தில் தாலி கட்டி இருப்பதும் பக்கத்தில் அரசி கழுத்தில் தாலி தொங்கிக் கொண்டிருக்கிறது.
அதை காட்டும் விதமாக நான்கு பேரும் சேர்ந்து வீடியோவை எடுத்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். மகள் மீது பாசத்தை கொட்டி வரும் பாண்டியன் இந்த அதிர்ச்சியை எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறார். அப்பா கனவை நிறைவேற்றும் விதமாக அரசாங்க உத்தியோகத்தை வாங்க வேண்டும் என்று முயற்சி பண்ணும் அரசிக்கு எதிர்பாராத விதமாக கல்யாணம் ஆகுவது மிகப்பெரிய ஏமாற்றமாக முடியப்போகிறது.